ஆப்பாயில் வர லேட்டானதால் ஹோட்டல் சூறை - வாலிபருக்கு வலைவீச்சு!!

ஆப்பாயில் வர லேட்டானதால் ஹோட்டல் சூறை - வாலிபருக்கு வலைவீச்சு!!

Advertisement

திருச்சி மாவட்டம் முசிறி அருகே கைகாட்டி பகுதியில் ஹோட்டல் ஒன்று உள்ளது. இதனை முசிறி பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் நடத்தி வந்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் நேற்று அவருடைய ஹோட்டலுக்கு முசிறியைச் சேர்ந்த ராஜபாண்டி என்பவர் சாப்பிட சென்றுள்ளார். ஆப்பாயில் ஆர்டர் செய்த அவர் வர தாமதமானதால் கடை உரிமையாளர் பாஸ்கர் மற்றும் மாஸ்டர் ஆகியோரை தாக்கியுள்ளார். மேலும் கடையை சூறையாடிய அங்கிருந்து சென்றுள்ளார்.

Advertisement

இதில் காயமடைந்த கடை உரிமையாளர் பாஸ்கர் மற்றும் மாஸ்டர் முருகேசன் ஆகியோரை முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து பாஸ்கர் கொடுத்த தகவலின் பேரில் முசிறி போலீசார் ராஜபாண்டி மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd