முதல்வரின் மனைவியை அழைக்க சென்ற சொகுசு கார் திருச்சியில் விபத்து

முதல்வரின் மனைவியை அழைக்க சென்ற சொகுசு கார் திருச்சியில் விபத்து

தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் இல்லத் திருமண விழா இன்று புதுக்கோட்டையில் நடைபெறுகிறது. இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்து அதன் பின்னர் கார் மூலம் புதுக்கோட்டை செல்ல இருக்கிறார்.

முன்னதாக அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி விமான நிலையம் வந்தார். அவரை வரவேற்பதற்காக இருந்து சொகுசு கார் திருச்சி விமான நிலைய நோக்கி சென்றது. அசுர வேகத்தில் சென்ற அந்த கார் மேலப்புதூர் பகுதியில் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. ஒரு ஆட்டோவை நசுக்கியும், மற்றொரு டூவீலரில் தூக்கி வீசியும், காருக்குள் மற்றொரு இரண்டு சக்கர வாகனம் சிக்கிக் கொண்டது.

காருக்கு முன்பு புறம் சிக்கிய இருசக்கர வாகனத்தை எடுக்க முடியாமல் நீண்ட நேரம் போக்குவரத்து காவல்துறையினர் சிரமப்பட்டனர். பின்னர் கிரேன் உதவியுடன் அந்த கார் சாலையிலிருந்து அகற்றப்பட்டது. இந்த விபத்துக்கு குறித்து போக்குவரத்து தெற்கு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலினை அழைத்து செல்வதற்கு ஏற்கனவே ஒரு கார் சென்று நிலையில் அதற்கு மாற்றாக இந்த கார் பயன்படுத்துவதாக இருந்தத. இந்த நிலையில் தற்போது இந்த சொகுசு கார் விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விபத்துக்குள்ளான கார் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision