திருச்சியில் கோவாக்சின் இரண்டாவது தவணை செலுத்தி கொள்ள காத்திருப்போர் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது

திருச்சியில் கோவாக்சின் இரண்டாவது தவணை செலுத்தி கொள்ள காத்திருப்போர் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது

அரசு பரிந்துரைத்த கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளில் கோவாக்சின் இரண்டு தவணைக்கும் இடைப்பட்ட கால அளவு குறைவாக இருப்பதால் வெளிநாடு செல்பவர்களும் வயதில் முதிர்ந்தவர்கள் இத்தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள முன்வந்தனர். ஆனால் தற்போது இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்வது தாமதப்படுகிறது.

திருச்சி மாநகரில் முகாம்களில் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே போடப்படுவதால்  கோவாக்சின் இரண்டாவது தவணை செலுத்தி கொள்பவர்கள் காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது. காந்தி மார்க்கெட்டில் 600க்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கு முகாம்கள் மூலம் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஆனால் அவர்கள் அனைவருமே தற்போது இரண்டாவது தவணை செலுத்திக் கொள்வதற்கு காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது. திருச்சி மாவட்ட நிர்வாகம் உடனடியாக அவர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். 

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில் இன்னும் சில நாட்களில் கோவாக்சின் முகாம்களில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இரண்டாவது தவணை செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு கோவாக்சின்  சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பயனாளிகள் அதிகம் காத்திருக்காதப்படியும் மக்கள் அதிகம் கூடுவதையும் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr