காவல் நிலையங்களில் அதிரடி சோதனை நடத்திய உதவி ஆணையருக்கு வந்த சோதனை

காவல் நிலையங்களில் அதிரடி சோதனை நடத்திய உதவி ஆணையருக்கு வந்த சோதனை

திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்டகாவல் நிலையங்களில் பணப்பட்டுவாடா செய்துள்ளதாக புகார் வந்தது. உடனே உதவி ஆணையர் தமிழ்மாறன் தலைமையில்  தேர்தல் அலுவலர்கள் நேரடியாக காவல் நிலையங்களில் அதிரடி சோதனை நடத்தினர் .திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட 8 காவல் நிலையங்களில் திமுகவினர் பணபட்டுவாடா செய்துள்ளதாக தேர்தல் ஆணையத்திலிருந்து  வந்த தகவலை அடுத்து இந்த அதிரடி சோதனை நடைபெற்றது. தில்லைநகர் அரசு ,மருத்துவமனை காவல் நிலையங்களில் பணகவர்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் மற்ற காவல் நிலையங்களிலும் சோதனை நடத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இவ்விவாகரத்தில் காவல்துறையில் பணிபுரிந்த 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர் .2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது .இந்நிலையில் வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு தேர்தல் ஆணையம் மாற்ற பரிந்துரை செய்தது. உதவி ஆணையர் நேரடியாக சோதனையில் ஈடுபட்ட பொழுது வேறு ஏதும் தகவல்கள் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்காமல் இருந்தாரா? இல்லை வேறு ஏதும் தகவல்கள் மறைக்கப்பட்டதா? என்ற அடிப்படையில் தேர்தல் ஆணையமும் விசாரணை நடத்தியது.

திடீரென  நேற்று பொன்மலை உதவி ஆணையர் தமிழ்மாறன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதனுடன் திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல் நிலையங்களில் திமுகவினர் பணம் பட்டுவாடா செய்த விவகாரம் சங்கிலித் தொடர் போல் நீண்டு கொண்டே செல்கிறது. இது மேலும் அடுத்த கட்ட விசாரணையை நோக்கி செல்லும் எனவும் காவல் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் அரசியல் தலைவர்கள் வேட்பாளர்கள் பரப்புரையில் பரபரப்பாக இருப்பதை காட்டிலும் இவ்வழக்கின் அடுத்த அடுத்த திருப்பம் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தற்பொழுது வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது பொன்மலை உதவி ஆணையரும் விசாரணைக்கு உட்படுத்தப் படுவர் மேலும் அடுத்த கட்ட திருப்பங்கள் விசாரணைக்குப் பிறகு வெளிவரும் எனவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தேர்தல் ஆணையம் இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல்கள் வந்து கொண்டுள்ளன.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81