விமானிக்கு நெஞ்சு வலி - விமானம் ரத்து - பயணத்தை ரத்து செய்த அமைச்சர்
சென்னையிலிருந்து திருச்சிக்கு இண்டிகோ விமானம் 68 பயணிகளுடன் வந்தது. இதே விமானம் சென்னை புறப்படுவதற்கு தயாராக இருந்த நிலையில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
Advertisement
அந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக 58 பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர். அவர்களில் 42 பேர் ஹைதராபாத் செல்லும் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். மற்ற பயணிகள் மாலை சென்னை சென்ற விமானத்திற்கு மாற்றுப் பதிவு செய்து கொண்டனர். விமானம் ரத்து குறித்து, விமான நிலைய வட்டாரங்கள் கூறுகையில், இண்டிகோ விமானத்தை இயக்க இருந்த பைலட்டுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர், உடனடியாக திருச்சி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Advertisement
மேலும் இந்த விமானத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பயணம் செய்ய முன்பதிவு செய்து இருந்தார். அவர் அந்த விமானத்தில் சென்னை சென்று அங்கு உடல் உறுப்பு தானம் குறித்த வீடியோ கான்பிரன்சிங் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருந்தார். விமானம் ரத்து செய்யப்பட்டதால் அவர் புதுக்கோட்டைக்கு திரும்பிச் சென்றார். அங்கு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் ஆறாம் இடம் பிடித்ததற்கான விருது அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய