தமிழகத்தில் இன்று 1435 பேருக்கு கொரோனா - திருச்சியில் 28 பேருக்கு தொற்று

தமிழகத்தில் இன்று 1435 பேருக்கு கொரோனா - திருச்சியில் 28 பேருக்கு தொற்று

கொரோனா நோய்த்தொற்று ஆரம்பித்து எட்டு மாதங்கள் கடந்து பயணித்து வருகிறோம் நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா தோற்றால் இதுவரை 7,77,616 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7,54,826 கொரோனா நோய்த் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். தமிழகத்தில் கொரனோ தோற்றால் இதுவரை 11, 683 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில் இன்று தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா தொற்றால் 1435 பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 14 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.‌ திருச்சியை பொறுத்தவரை இதுவரை 13353 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 13032 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். தற்போது திருச்சியில் 149 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Advertisement

திருச்சி பொறுத்தவரை மொத்தமாக 172 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி திருச்சியில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.