திருச்சி அருகே கால்நடை மருத்துவமனை கட்டிட பூமி பூஜை - அமைச்சர் தொடங்கி வைத்தார்!

திருச்சி அருகே கால்நடை மருத்துவமனை கட்டிட பூமி பூஜை - அமைச்சர் தொடங்கி வைத்தார்!

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணிகண்டம் ஒன்றியம் இனாம்குளத்தூர் ஊராட்சி, ஆலம்பட்டி புதூர், சின்ன ஆலம்பட்டியில்

Advertisement

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் S.வளர்மதி ரூபாய் 37,50,000 மதிப்பில் கால்நடை மருத்துவமனை கட்டிடத்தை பூமி பூஜை செய்து கட்டிடப் பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மணிகண்டம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எஸ்.பி.முத்துக்கருப்பன், ஒன்றிய பொருளாளர் வீரமுத்து, கால்நடை துறை இணை இயக்குனர், துணை இயக்குனர், PWD உதவிப் பொறியாளர் மற்றும் முன்னாள் ஊராட்சி கழகச் செயலாளர் சந்திரசேகர் மற்றும் ஒன்றிய கழக, கிளை கழக நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Advertisement