அரை இறுதியில் இந்தியா நியூசிலாந்து தொடர் வெற்றியை ருசிக்குமா?

அரை இறுதியில் இந்தியா நியூசிலாந்து தொடர் வெற்றியை ருசிக்குமா?

இந்தியாவில் நடந்து வரும் 13வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்று முடிவுற்ற நிலையில் இன்று முதலாவது அரை இறுதிப்போட்டி துவங்க இருக்கிறது, முதல் நான்கு இடங்களை பிடித்த இந்தியா, தென்னாப்ரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அரையிறுதி போட்டிகள் இன்றும் நாளையும் நடைபெறுகின்றன. இன்று மும்பை வான்கடே மைதானத்தில் பிற்பகல், இரவு ஆட்டமாக 2 மணிக்கு தொடங்கும் போட்டியில், இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

உலகக்கோப்பையில் அரையிறுதி போட்டிகள், இறுதிப் போட்டிக்கு மட்டுமே ஐசிசி 'ரிசர்வ் டே' என்ற சிறப்பை வழங்கியுள்ளது. இந்த போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டால், மறுநாள் போட்டி நடத்தப்படும். போட்டி 2வது நாளும் மழையால் பாதிக்கப்பட்டால் லீக் சுற்றில் வெற்றி பெற்ற அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். அதேபோல இறுதிப்போட்டியிலும் 2வது நாளும் மழையால் பாதிக் கப்பட்டால் ”சூப்பர் ஓவர் ”முறையில் போட்டிக்கு முடிவு காணப்பட்டு வெற்றி பெற்ற அணியை அறிவிக்கும். இந்த தொடரின் மொத்த பரிசுத்தொகை ரூபாய் 83 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ரூபாய் 33 கோடி பரிசாக வழங்கப்படும். இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூபாய் 16.5 கோடி வழங்கப்படும்.

உலகக்கோப்பையில் இந்தியா 8வது முறையாக அரை யிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இதில் 3 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 1983ல் இங்கிலாந்து, 2003ல் கென்யா, 2011ல் பாகிஸ்தானை வென்ற இந்திய அணி, 1987ல் இங்கி லாந்திடமும், 1996ல் இலங்கையிடமும், 2015ல் ஆஸ்தி ரேலியாவிடமும், 2019ல் நியூசிலாந்திடமும் தோல்விய டைந்தது. உலகக்கோப்பையில் இந்தியா-நியூசிலாந்து அணிக ளுக்கு இடையே இதுவரை 10 போட்டிகள் நடந்துள்ளன. ஒரு போட்டி, மழையால் ரத்தானது. மற்ற ஒன்பது போட்டிகளில் ஐந்து முறை நியூசிலாந்தும், நான்கு முறை இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன.

உலகக்கோப்பையில் இந்திய மண்ணில் இந்தியாவுக்கு எதி ராக விளையாடிய மூன்று போட்டிகளிலும், நியூசிலாந்து தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. உலகக்கோப்பையில் நியூசிலாந்து ஒன்பதாவது முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இதில் 2015, 2019ல் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது. முதல் உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு இந்தியாவிற்கு பெற்றுத்தந்தவர் கபில்தேவ் தலைமையிலான அணி என்பது சிறப்பு !.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

 https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision