மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் பூட்டி சீல்வைப்பு

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் பூட்டி சீல்வைப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி மகாராஷ்டிராவிலிருந்து திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்றத் தொகுதிகளில் பயன்படுத்தும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 5686 மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் 4341 மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதனை கண்டறியும் 4686 விவிபேட் இயந்திரங்கள் கடந்த டிசம்பர் 29ம்தேதியன்று திருச்சி வரப்பெற்று அதன்பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

இயந்திரகள் சரிபார்க்கப்பட்டு பின்னர் கடந்த ஏப்ரல் 6ம்தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டது. அதன்படி சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது நேற்று காலை 8 மணிக்குத் தொடங்கி இரவு வரை நடைபெற்று வெற்றி பெற்றவர்களின் பெயர்பட்டியல் மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியால் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, மேற்கு, ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், முசிறி, லால்குடி, துறையூர்(தனி) ஆகிய 9 சட்டமன்றத் தொகுதிகளில் 3292 வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரம், விவிபேட் இயந்திரங்கள் அனைத்தும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் பின்புறம் உள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திரக்கிடங்கிற்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டன.

பின்னர் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான திவ்யதர்ஷினி மற்றும் அரசியல்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு பூட்டி சீல்வைக்கப்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF