வாவ்..... ஏழு வந்தே பாரத் ரயில்கள் இயக்கம் !!

வாவ்..... ஏழு வந்தே பாரத் ரயில்கள் இயக்கம் !!

மதுரை கோட்டத்தில் 7 புதிய வந்தே பாரத் ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது...

தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு விடுமுறை நாட்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், பயணிகள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் சென்னை நெல்லை இடையே 7 சிறப்பு வந்தே பாரத் ரயில்கள், மதுரை, திருச்சி வழியாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது தீபாவளிக்கு மக்களின் ஏகோபித்த வரவேற்பு கிடைத்ததை அடுத்து மீண்டும் அதே பாணியில் வந்தே பாரத் ரெயிலை இயக்க திட்டமிட்டுள்ளார்கள் .

இதன்படி, வரும் நவ.16, 23, 30 மற்றும் டிசம்பர் 7, 14, 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து வண்டி எண் 06067 காலை 6 மணிக்கு புறப்பட்டு, பகல் 2.15 மணிக்கு நெல்லைக்கு சென்றடையும். அதேபோல் மறுமார்க்கத்தில் வண்டி எண் 06068 மாலை 3 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும். இந்த ரயில்கள் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் அகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயில் சேவையை, ஜனவரி 18 வரை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத் துள்ளனர் ரெயில்வே நிர்வாகம் பரிசீலித்து நல்ல முடிவினை எடுக்க வேண்டும் என்றும் ஆம்னி பேருந்துகளின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision