அரியமங்கலம் குப்பை கிடங்கை மத்திய பேருந்து நிலையமாக மாற்ற மாவட்ட ஆட்சியரிடம் மனு!

அரியமங்கலம் குப்பை கிடங்கை மத்திய பேருந்து நிலையமாக மாற்ற மாவட்ட ஆட்சியரிடம் மனு!

அரியமங்கலம் குப்பை கிடங்கை ஒருங்கிணைந்த மத்திய பேருந்து நிலையமாக மாற்ற வேண்டும் என ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு சார்பாக இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Advertisement

திருச்சி மாவட்ட அரியமங்கலம் பகுதியில் 47.7 ஏக்கரில் இயங்கிவரும் அரியமங்கலம் குப்பை கிடங்கு தற்போது சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. முழுமையாக சுத்தம் செய்த பின் அந்த இடத்தில் ஒருங்கிணைந்த மத்திய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் எனவும், அவ்வாறு அமைப்பதால் நகரத்தின் உள்ளே பேருந்துகள் நுழையாமல் புறநகர் வழியாக வந்து செல்ல வசதியாக இருக்கும் எனவும்,சென்னை சேலம் வழியாக வரக்கூடிய பேருந்துகள், தஞ்சை மார்க்கமாக வரக்கூடிய பேருந்துகள்,

Advertisement

புதுக்கோட்டை வழியாக வரக்கூடிய பேருந்துகள், மதுரை திண்டுக்கல் வழியாக வரக்கூடிய பேருந்துகள் என அனைத்து ஊர்களில் இருந்தும் வரக்கூடிய பேருந்துகளும் நகரின் உள்ளே வராமல் வெளியே வந்து செல்வது மாநகரின் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதாகவும் இங்கு ஒருங்கிணைந்த மத்திய பேருந்து நிலையம் அமைந்தால் அனைத்து ஊர்களுக்கும் செல்வதற்கு வசதியாக இருக்கும் என 

அரியமங்கலம் பகுதியில் மத்திய பேருந்து நிலையம் அமைய வேண்டும் என ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு சார்பாக மனு அளித்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm