திருச்சி வானொலி நிலையம் மாற்றப்படுகிறதா மத்திய இணையமைச்சர் திருச்சியில் பேட்டி

திருச்சி வானொலி நிலையம் மாற்றப்படுகிறதா மத்திய இணையமைச்சர் திருச்சியில் பேட்டி

திருச்சி விமான நிலையத்தில், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல் .முருகன் செய்தியாளர்களை  சந்தித்தார்.
அதில் பொள்ளாச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாஜக,இந்து அமைப்பு நிர்வாகிகள் வீடு வாகனங்கள்  தாக்குதலுக்கு ஆளாகிறது.இது போன்ற தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இச்செயல்களில் ஈடுபடும் உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதிகளை
கண்டறிந்து நடவடிக்கை எடுக்க
தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தப்படுகிறது.

ஆனால் திமுக செய்தி தொடர்பாளர் TKS  இளங்கோவன் NiA தவறுதலாக பயன்படுத்துவதாக  கூறியுள்ளார்.
இது கண்டிக்கத்தக்கது.NiAசோதனை  தேசத்தின் பாதுகாப்பு கருதி
சரியான ஆதாரத்தின் அடிப்படையில் சோதனையானது நடைபெற்றது.ஆனால் 
NIA  சோதனையை ஓட்டு வங்கி அரசியலுக்காக திமுக பயன்படுத்துகிறது.

 திருச்சி அகில இந்திய வானொலி நிலையம் சென்னைக்கு மாற்றப்படுகிறதா? மத்திய 
இணை அமைச்சர் பதில்...திருச்சி அகில இந்திய வானொலி நிலையம் சென்னைக்கு மாற்றப்பட உள்ளதாக செய்தி வருகிறதே? என்ற கேள்விக்கு பதில் அளித்த
முருகன்  அதுபோன்ற எண்ணம் இல்லை,அது வதந்தி என்றார்.


மேலும் ஆ.ராசாவின் பேச்சுக்கு மத்திய இணை அமைச்சர் எம் முருகன் விமர்சனம் தெரிவிக்கவில்லை என்ற  கேள்விக்கு பதில் அளித்த அவர் பட்டியல் இனம் உள்ளிட்ட அனைத்து இந்துக்களையும் 
ஆ .ராசா தவறாக பேசியுள்ளார். பட்டியல் இனத்தவர்களும் கடுமையாக உழைத்து சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு கோயிலை கட்டி  இறைவனை வழிபடுபவர்கள் தான் என குறிப்பிட்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO