திருச்சியில் முதல்வர் கேக் - பொதுமக்கள் வியப்பு
கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருச்சியில் உள்ள பல்வேறு பேக்கரி நிறுவனங்கள் பல வகையான கேக்குகள் செய்து காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சிறப்பான ஆட்சி செய்வதாகவும், அவரை வாழ்த்தும் விதமாகவும் திருச்சி சத்திரப் பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீ ராஜேஸ்வரி பேக்கரி மற்றும் ஸ்வீட்ஸ் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவத்தில் சுமார் 92 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட கேக் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த கேக்கை 90 கிலோ சக்கரை, 80 முட்டை கலந்த கலவையால் 24 மணி நேரத்தில் பேக்கரி ஊழியர்கள் நான்கு பேர் குழுவாக சேர்ந்து தயாரித்துள்ளனர். இந்த கேக் இரண்டு நாட்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பார்த்து செல்பி எடுத்து செல்கின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO