மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படக் கண்காட்சி

மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படக் கண்காட்சி

Building Blocks of Sarva Shrestha Bharat 2023 - 2024 - மாணவர்களிடம் காந்திய சிந்தனைகளை வளர்திடவும் மாணவர்களிடம் உள்ளார்ந்து புதைந்திருக்கும் நற்பண்புகளை வெளி கொணர்வதும் கல்வியின் நோக்கமாக உள்ளது. பள்ளிக்கல்வி பயிலும் மாணவர்களிடத்தில் நமது தேசத்தந்தை மகாத்மா காந்திஜி அவர்களின் சிந்தனைகள் மற்றும் விழுமியங்களை கொண்டு சேர்ப்பது இன்றியமையா ஒன்றாகும்.

அதன் அடிப்படையில் (2023 - 2024) ஆம் கல்வியாண்டில் Building Blocks of Sarva Shrestha Bharat இன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களிடம் உண்மை நேர்மை அகிம்சை உள்ளிட்ட காந்திஜியின் சிந்தனைகளையும் நல்விழுமியங்களையும் எடுத்துரைத்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் காந்திஜி அவர்களின் வாழ்க்கை குறித்த புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது.

பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் இதில் பங்கேற்று காந்திஜி குறித்த வாழ்க்கை வரலாற்று தகவல்களை அறிந்து கொண்டனர். கேட்கப்பட்ட வினாக்களுக்கு சிறப்பாக விடையளித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளி தலைமையாசிரியர் ஜீவானந்தன் தலைமையில் நடைபெற்ற இப்புகைப்பட கண்காட்சியில், யோகா ஆசிரியரும், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிறுவனருமான விஜயகுமார் அவர்களின் வழிகாட்டலின் பேரில் பள்ளி ஆசிரியர்கள் உமா சரண்யா சகாயராணி உள்ளிட்டோர் சிறப்பாக ஏற்பாடுகளை செய்து இருந்தனர். நிகழ்ச்சியில் 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கண்காட்சியை கண்டு ரசித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision