திருச்சி மாநகராட்சி பகுதியில் முழுவீச்சில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்ட பணிகள்!!

திருச்சி மாநகராட்சி பகுதியில் முழுவீச்சில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்ட பணிகள்!!

திருச்சி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து அதற்கான வேலைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisement

இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 2017 ஆம் ஆண்டு அம்ரூத் திட்டத்தின் கீழ் மொத்தமாக திருச்சி மாநகராட்சியின் 15 வார்டுகளில் 312 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகிறது.

இத்திட்டத்தின்கீழ் 22 கிலோ மீட்டருக்கு உந்து குழாயும், 331 கிலோ மீட்டர் தூரத்திற்கு கழிவுநீர் குழாயும், 8,690 ஆழ்துளை தொட்டிகளும் 7 பம்பிங் ஸ்டேஷன்களும் 11 லிப்டிங் ஸ்டேஷன்களும் அமைக்கப்பட்டு 32 ஆயிரம் வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்புகள் இதுவரை வழங்கப்பட்டு விட்டது.

மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இப்பணியில் இடையில் தாமதமாக செயல்பட்டு வந்தாலும் தற்போது இந்த பாதாள சாக்கடை திட்ட பணிகள் மூன்றாவது ஆண்டாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பணிகளை முடிப்பதற்காக திருச்சி பெரிய மிளகுபாறை கலெக்டர் அலுவலகம் எதிரே கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வந்தது. இப்பகுதியில் எந்திரங்களின் உதவியுடன் குழாய் பதிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முழுவீச்சில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.