திருச்சி சரக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான "கேடயம்" திட்டம் - சிறப்பு தொகுப்பு!!

திருச்சி சரக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான "கேடயம்" திட்டம் - சிறப்பு தொகுப்பு!!

திருச்சி சரக காவல்துறை மற்றும் இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் இணைந்து திருச்சி சரகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான வன்முறையற்ற சமூகத்தை உருவாக்கும் நோக்கில் "கேடயம்- SHIELD" என்ற செயல்திட்டத்தை தொடங்கி உள்ளனர். 8 மாதகால திட்டம் திருச்சியில் செப்டம்பர் 21ஆம் தேதி தொடங்கப்பட்டது. திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர். Z. ஆனி விஜயா, IPS இந்த திட்டத்தை வழிநடத்துகிறார். 

இத்திட்டமானது திருச்சி, கரூர், அரியக, பெரம்பலூர், மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த திட்டத்தினை புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை, இண்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் மற்றும் செட் இன்டியா சமூக சேவை நிறுவனமும் இணைந்து செயல்படுத்தவுள்ளது. 

Advertisement

திட்டத்தின் ஒரு பகுதியாகத் திருச்சி சரகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றச்செயல்களின் தரவுகளைச் சேகரித்து அதில் மிகத்தீவிரத்தன்மை கொண்ட ஆறு குற்றங்களை கண்டறிவது மட்டுமில்லாமல் அதிகமாக குற்றங்கள் நடைபெறும் 25 இடங்கள் அடையாளம் காணப்படும். 

மேலும் இக்குழு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு நலன் சார்ந்து இயங்கும் செயற்பாட்டாளர்கள் மற்றும் அமைப்புகளை ஒருங்கிணைந்து வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும். குற்றங்கள் அதிகமாக நடைபெறும் இடங்களில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பொதுமக்களிடையே உள்ள  அச்சத்தைப் போக்க சமூகக்காவலை அதிகரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும். 

இச்செயல்திட்டம் நான்கு நிலைகளாக வகுக்கப்பட்டுள்ளது. 

1.குற்ற நடவடிக்கைகளை ஆய்வு செய்தல்

2. திட்டத்தை வகுத்தல்

3.திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்

4. திட்டத்தின் தாக்கத்தை மதிப்பீடு செய்தல். 

நிலை 1- குற்ற நடவடிக்கைகளை ஆய்வு செய்தல்:

      • கடந்த ஐந்து ஆண்டுகளாக திருச்சிசரகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை ஆய்வு செய்தல். 

    • காவல்துறை மற்றும் குழந்தைகள் &பெண்கள் உரிமைகள் பாதுகாப்பு செயல்பாட்டார்களிடையே கணக்கெடுப்பு நடத்துதல். 

      • திருச்சி சரகத்தில் உள்ள அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களிடம் ஆலோசனை நடத்துதல். 

     • குழந்தைகளுக்கு உதவி மைய எண்- 1098, பெண்கள் உதவி எண்-181, காவல் உதவி எண்-100 ஆகியவற்றிற்கு வந்த அழைப்புகளை ஆய்வு செய்தல் மற்றும். 

நிலை 2- திட்டத்தை வகுத்தல்: 

     • கண்டறிதல் மற்றும் உறுதி செய்தல்-
       > 6 முக்கிய குற்றங்கள்
       > 25 அதிகமாக குற்றங்கள் நடைபெறும் இடங்கள்

      • திருச்சி சரகத்தில் உள்ள குழந்தைகள் & பெண்கள் உரிமைகள் பாதுகாப்பு செயல்பாட்டார்களின் நிலையைப் புரிந்துகொள்ளுதல். 

     • பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தளத்தில் முன் அனுபவம் கொண்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களை கண்டறிதல். 

     • திட்டத்தை இறுதி செய்தல். 

நிலை 3- திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்

     • மாவட்ட வாரியாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு செயற்பாட்டாளர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்குத் திறன்மேம்பாட்டு பயிற்சியை அளித்தல். 

     • அதிகமாக குற்றங்கள் நடைபெறும் இடங்களில் சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். 

       • பாதுகாப்புக்குள்ளாகும் பெண்கள் மற்றும் குழந்தைகளை அவ்வப்போது மீட்பது 

     • பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கியுள்ள விடுதிகளை அவ்வப்போது ஆய்வு செய்தல். 

      • குற்றவாளிகளை விரைவாக கண்டறிதல்- நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து தீர்வு காணுதல். 

     • அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் குற்றங்களை பதிவு செய்தவுடன் ஒருங்கிணைக்கும் தளத்தை(Portal)  அறிமுகப்படுத்துதல், மனுதாரர் பின்னூட்டப் படிவத்தை நடைமுறைப்படுத்துதல். 

     • குழந்தைகள் மற்றும் பெண்கள் எளிதாக அணுகக்கூடிய வகையில் காவல் நிலையங்கள் மற்றும் பூத்களை அமைத்தல். 

       • கிராம பஞ்சாயத்து மட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பஞ்சாயத்து அளவில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்துடன் இணைந்து பணியாற்றுதல். 

     •பெண்களுக்கான  ஒருங்கிணைந்த தளங்களை ( Women Integrau Networks) உருவாக்குதல். 

நிலை 4- திட்டத்தின் தாக்கத்தை மதிப்பீடு செய்தல்

       • பொதுமக்கள், காவல்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலச் செயற்பாட்டாளர்களிடம் ஒரு இறுதி கணக்கெடுப்பை நடத்துவது. 

     • திருச்சி சரக காவல்துறையில் பதிவான குற்றங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளுதல். 

     • வேறு தளங்களில் பதிவான குற்றங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளுதல். 

      • திட்டத்தின் தாக்கத்தை மதிப்பீடு செய்தல். 

      • திட்டத்தின் மூலம் அடைந்த பயன்களைத் தொடர்ந்து செயல்படுத்துதல். 

இத்திட்டத்தின் மூலம்:

• ஒருமுறையான, விஞ்ஞானப்பூர்வமான சான்றுகளை அடிப்படையாக கொண்ட காவல் பணியை உருவாக்கத்தின் மூலம் காவல்துறையின் செயல்திறனை அதிகரிக்கவும் திருச்சிசரகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முடியும். 

• குற்றவாளிகளின் மத்தியில் அச்சத்தை உருவாக்க முடியும். 

• திருச்சி சரகத்தில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நிலையில் உள்ள சமூகங்கள் மற்றும் நபர்களிடம் காவல்துறையின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துதல். 

• திருச்சி சரகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து அதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்ற ஒரு பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க முடியும்.