திருச்சியில் 80 வருடம் செயல்பட்டு வந்த ஐஸ்கிரீம் கடை சீல்
திருச்சி தெப்பக்குளம் மெயின்கார்ட்கேட்டில் உள்ள பிரபல ஐஸ்கிரீம் கடையில் பல்லி விழுந்த ஐஸ்கிரீம் விற்பனைக்கு கொடுக்கப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்ட நபரின் புகாரின் அடிப்படையில் உடனடியாக உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.ஆர்.ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு கடையை ஆய்வு செய்தனர்.
அந்த புகாரில் உண்மை இருப்பதை கண்டறிந்து ஆய்வு செய்ததில் அந்த கடை மிகவும் சுகாதாரமற்ற முறையிலும் கிருமி தொற்று ஏற்படும் வண்ணம் இருந்தது கண்டறியப்பட்டு அந்த கடையின் விற்பனை உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-இன் கீழ் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அந்த கடையில் வழக்கு போடுவதற்காக இரண்டு சட்டபூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாண்டி, செல்வராஜ், பொன்ராஜ், இப்ராஹிம் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும், பொதுமக்களும் இதுபோன்று உணவு கலப்படம் சம்மந்தப்பட்ட புகார்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள 99 44 95 95 95 / 95 85 95 95 95 மாநில புகார் எண் :9444042322 ஆகிய எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார். புகார் அளித்தவர் விவரம் ரகசியம் காக்கப்படும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision