குழந்தைகள் நலன்  பெற்றோருக்கும் மட்டுமின்றி நாட்டிற்கே நன்மை தரும் என திருச்சி சரக டிஐஜிபேச்சு

குழந்தைகள் நலன்  பெற்றோருக்கும் மட்டுமின்றி நாட்டிற்கே நன்மை தரும் என திருச்சி சரக டிஐஜிபேச்சு

திருச்சியில் இன்று (22.11.2020)சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா  தலைமையில்,
Dr.A.Zameer Pasha (IPDG.Rtn),  V.V.Subramanian(Major Donor.Rtn) முன்னிலையிலும் திருச்சி Rotary Club நடத்தும் சிறுவர்கள் துஷ்பிரயோகம் தடுப்பு பேரணி தொடங்கியது.

திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ஆனி விஜயா பேசிய போது ஒரு பெற்றோராக, பாதுகாவலராக, நலம் விரும்பியாக நீங்கள் அவர்களிடம் கவனிக்க வேண்டிய சில அறிகுறிகள் உள்ளன. பிள்ளைகளுக்கு ஏற்படும் ஒவ்வொரு காயம் பற்றியும் அவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும். அவர்களின் கண்ணீருக்கான காரணத்தை அறிய முற்பட வேண்டும். அவர்களுக்கு பரிசுகளை அளிப்பதைவிட அவர்களுக்காக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். வன்கொடுமை என்பது பல்வேறு வகையில் நடந்து வருகிறது - பாலியல் ரீதியாக, உணர்ச்சி ரீதியாக, உடல்ரீதியாக, மருத்துவ ரீதியாக மற்றும் அலட்சியம் காட்டுவது போன்றவை அதன் சில வகைகளாகும்.

சிலர் உடல் ரீதியான அறிகுறிகள் இல்லாத போதும் வன்கொடுமையை பிள்ளைகள் அனுபவிக்கலாம். அதை நாம் குழந்தைகளிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். 

உடல் ரீதியான வன்கொடுமை என்பது ஒரு வகை மட்டுமே. மற்ற வகை வன்கொடுமைகளும் இதே அளவிற்கு அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.