கோலாகலமாக நடைபெற்ற நடன நிகழ்ச்சி

கோலாகலமாக நடைபெற்ற நடன நிகழ்ச்சி

 கோடைகால விடுமுறை தினத்தை பயனுள்ளதாக மாற்றும் வகையில் திருச்சி தில்லை நகரில் செயல்பட்டு வரும் blaze டான்ஸ் ஸ்டூடியோவில் மூன்று கட்டமாக கோடைகால சிறப்பு நடன வகுப்புகள் நடைபெற்றது.

குழந்தைகள், ஜூனியர்,சீனியர் என்று மூன்று பிரிவுகளுக்கு தனித்தனியாக மூன்று விதமான நடன வகுப்புகள் நடைபெற உள்ளது.

மே 1-10 வரை பாலிவுட் நடன வகுப்புகளும், மே11 -20 ந் தேதி வரை கோலிவுட் வகை நடனங்கள்,மே 20-30 ந் தேதி வரை ஹிப்ஹாப் நடன வகுப்புகள் நடைபெற்றன.

இந்த சிறப்பு பயிற்சி வகுப்பில் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்றதை தொடர்ந்து கடந்த 29ந் தேதி செப்கோ ஆடிடோரியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடனமாடினர்.

இந்நிகழ்ச்சி சிறப்பு விருந்தினராக விஜய் டிவி நடிகர் டி.எஸ்.கே மற்றும் சூப்பர் சிங்கர் புகழ் தன்யாஸ்ரீ சிறப்பு விருந்தினர்களாக கலந்து

 கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தி மகிழ்வித்தனர்.நிகழ்வில் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள், பொதுமக்கள் என 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO