பெட்ரோல் பங்க் வைக்க எதிர்ப்பு - பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சாலை மறியல் போராட்டம்!

பெட்ரோல் பங்க் வைக்க எதிர்ப்பு - பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சாலை மறியல் போராட்டம்!

திருச்சி மலைக்கோட்டை தெப்பகுளம் பகுதியில் உள்ள மேலப்புலிவார்டு ரோட்டில் பிஷப் ஹீபர் பள்ளிக்கு சொந்தமான இடத்தில் முயற்சிப்பதாக கூறி பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

இந்நிலையில் சிஎஸ்ஐ தென் இந்திய திருச்சபை திருச்சி தஞ்சை திருமண்டலத்திற்கு சொந்தமான சுமார் 2,000 சதுர அடி இடத்தில் கடந்த 40 வருடங்களாக திருச்சி காட்டுரை சேர்ந்த சுந்தரம் என்பவர் பெட்ரோல் பங்க் நடத்தி வந்ததாகவும், கடந்த 2003 ஆம் ஆண்டு இந்த இடம் தங்களுக்கு தேவை என்பதால் அதை கேட்ட போது இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. 

பின்னர் இரு தரப்பினரும் திருச்சி மாவட்ட முன்சீப் கோர்ட்டில் வழக்கு தொடுத்து தற்போது வழக்கு நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கிறார்கள். கடந்த 2018ஆம் ஆண்டு வழக்கு தனக்கு சாதகமாக அமைந்துவிட்டதாக காட்டூரைச் சேர்ந்த சுந்தரம் தரப்பில் தெரிவிக்கிறார்கள். ஆனால் கடந்த அக்டோபர் 24ஆம் தேதி கோட்டை காவல் சரகத்தில் நடந்த பெட்டிசன் மேலாவில் தென்மண்டல திருச்சபை சார்பாக பிரச்சினைக்குரிய இடத்திற்கு தீர்வு காண மனு கொடுத்ததாகவும் காவல் ஆய்வாளர் இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி வழக்கு என்ன நிலையில் உள்ளதோ அதன்படியே இருக்கட்டும் எனவே யாரும் வேறு எந்த முயற்சியில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளார். 

Advertisement

இதற்கிடையில் இன்று சிஎஸ்ஐ திருச்சி தஞ்சை திருமண்டலம் சொத்து குழு செயலர் ராஜேந்திரன் தலைமையில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பெட்ரோல் பங்க் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கட்டுமான பணிகளுக்கான உபகரணங்களை அகற்றி போராட்டம் நடத்தினர். பின்னர் கோட்டை காவல் நிலைய உதவி ஆணையர் தலைமையில் இருதரப்பினரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS