பாதாள சாக்கடை குழியில் சிக்கிய லாரி - அவதியில் மாநகர வாசிகள்

பாதாள சாக்கடை குழியில் சிக்கிய லாரி - அவதியில் மாநகர வாசிகள்

திருச்சி மாநகரில் நடைபெறும் பாதாள சாக்கடை பணியால் தினமும் மக்களுக்கு இன்னல்கள் ஏராளாம். முக்கியமான பிரதான சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் முடிந்து சில சில இடங்களில் சாலைகள் புதிதாக போடப்படுகிறது. சில இடங்களில் பறிக்கப்பட்ட குழிகள் மூடப்படாமலும் மூடிய குழிகளில் இருந்து கழிவு நீர் வெளியேறும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது.

திருச்சியின் முக்கியமான சாலையான பிராமினட் ரோடு பகுதியில் ஒரு மாதத்திற்கு முன்பு பறிக்கப்பட்டு குழிகள் மூடப்பட்டு சாலைகள் சரிவர போடாமல் குண்டும் குழியுமாக இருந்தது. கனரக வாகனங்கள் சென்ற பொழுது அதில் இருந்து கழிவுநீர் வெளியில் வரும் நிலை ஏற்பட்டது. 

மீண்டும் பாதாள சாக்கடை குழிகள் பறிக்கப்பட்டு அந்த சாலையில் செம்மண் கலந்தநீர் ஓடியது. வாகன ஓட்டிகள் பயணிக்க முடியாத நிலையில் இருந்தது. இந்நிலையில் லாரி ஒன்று அவ்வழியே செல்லும்போது தோண்டப்பட்ட மூடிய குழிக்குள் சிக்கியது. முக்கிய சாலையாக இருப்பதால் போக்குவரத்து ஸ்தம்பித்த நிலையில் அதன் பிறகு போக்குவரத்து போலீசார் அதில் தடுப்பு வேலிகளை அமைத்துள்ளனர்.

அந்த சாலையில் முழுவதுமே பெரிய பெரிய பள்ளங்களாக காட்சியளிக்கிறது. மாநகராட்சி நிர்வாகம் தோண்டப்பட்ட குழிகளை முறையாக பள்ளங்கள் ஏற்படாமல் மூடி தரமான சாலைகளை போட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்பொழுதுதான் வாகன ஓட்டிகள் விபத்து இல்லாமல் சாலையில் பயணிக்க முடியும் என தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision