பணியிலிருந்த அரசு பேருந்து நடத்துனர் திடீர் மரணம்
திருச்சி மாவட்டம் மணப்பாறை பன்னாங்கொம்பு ராஜாபட்டியை சேர்ந்தவர் வெள்ளச்சாமி (49). இவர் அரசு போக்குவரத்து கழகதீரன் நகர் கிளையில் நடத்துனராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணிக்கு சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து காந்தி மார்க்கெட் வழியாக போலீஸ் காலனி வரை செல்லும் அரசு பேருந்தில் பணியில் இருந்தார்.
அந்த பேருந்தில் 50-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்த பேருந்து பாலக்கரை பிரபாத் ரவுண்டானா அருகே வந்த போது வெள்ளச்சாமி மயக்கம் அடைந்தார். உடனே அரசு பேருந்து நிறுத்தப்பட்டு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளச்சாமி இறந்தார். இது பற்றி தகவல் அறிந்த தீரன் நகர் கிளை மேலாளர் மற்றும் சக ஊழியர்கள் சென்று வெள்ளச்சாமி உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision