தேசிய கல்லூரியில் நூலகம் மற்றும் தகவல் அறிவியல் சான்றிதழ் படிப்பு தொடக்கவிழா

தேசிய கல்லூரியில் நூலகம் மற்றும் தகவல் அறிவியல் சான்றிதழ் படிப்பு தொடக்கவிழா

திருச்சி தேசியக் கல்லூரியில் நூலகத் துறை சார்பாக புதிதாக தொடங்கப்பட்ட சான்றிதழ் படிப்பிற்கான தொடக்கவிழா இன்று மதியம் இரண்டரை மணி அளவில் கல்லூரி நூலகத்தில் அமைந்துள்ள ஒலி-ஒளி அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.விழாவிற்கு கல்லூரி செயலாளர் ரகுநாதன் முன்னிலை வகித்தார் முதல்வர் குமார் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினர் திருச்சி மாவட்ட மைய நூலக அலுவலர் சிவக்குமார் பேசுகையில்,

நூலகம் மற்றும் தகவல் அறியும் சான்றிதழ் படிப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டால் எதிர்காலத்தில் மாணவர்களாகிய நீங்கள் கிராமப்புற நூலகம், மாவட்ட மைய நூலகம்,பள்ளி நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையங்களில் உள்ள நூலகங்களில் நூலக உதவியாளர் மற்றும் உதவி நூலகர் ஆகிய பணி வாய்ப்புகள் கிடைப்பதற்கு அதிகம் வாய்ப்புகள் உள்ளது.

அதுமட்டுமில்லாமல் மாணவர்களாகிய நீங்கள் காலத்திற்கு தகுந்தாற்போல் நூலக மென்பொருள்கள் கணினி தொழில் நுட்பங்களையும் மற்றும் நவீன நூலகத்திற்கு ஏற்றார் போல் தங்களை மேம்படுத்திக் கொள்ளுமாறு சிறப்புரை நிகழ்த்தினார்.கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் பென்னட் மற்றும் அறிவியல் புல முதன்மையர் முனைவர் டிவி சுந்தர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

கல்லூரி நூலகர் முனைவர் சுரேஷ் குமார் அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார் பின்னர் சான்றிதழ் படிப்பின் முக்கியத்துவத்தையும் படிப்பு தொடங்குவதற்கு உறுதுணையாக இருந்த கல்லூரி நிர்வாகத்தினற்கும் முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் நூலக உதவியாளர் ஆகியோருக்கு நன்றி கலந்த பாராட்டுதலை தெரிவித்துக்கொண்டார்.இறுதியாக நூலகத்துறை மாணவர்களாகிய ராதா மற்றும் ஜிஷ்ணு ஆகியோர் நன்றியுரை நிகழ்த்தினர்.நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நூலக உதவியாளர்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO