திருச்சியில் 2 கடைக்கு சீல், 17 கிலோ குட்கா பறிமுதல்

திருச்சியில் 2 கடைக்கு சீல், 17 கிலோ குட்கா பறிமுதல்

திருச்சிராப்பள்ளி காஜாமலை மற்றும் பூலாங்குடி பகுதியில் பொதுமக்களிடமிருந்து வரபெற்ற புகாரை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.ஆர்.ரமேஷ்பாபு தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது.

மேற்கண்ட ஆய்வின் போது N. முருகேசன் த/பெ நாகூரான் உதயம் மளிகை (54), காஜாமலை மெயின் ரோடு மற்றும் நாகராஜன் த/பெ.ஜெகதீசன், KJN டிபார்ட்மென்டல் ஸ்டோர், பூலாங்குடி, திருவெறும்பூர் தாலுகா ஆகிய இரண்டு கடைகளிலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஆய்வின்போது இரண்டு கடைகளிலும் சுமார் 17 கிலோ தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மேல்நடவடிக்கைக்காக இரண்டு சட்டபூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு, மேற்கண்ட இரண்டு நபர் மற்றும் புகையிலை பொருட்களை கே.கே.நகர் மற்றும் நாவல்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த குற்றத்திற்காக அந்த இரண்டு கடைகளும் சீலிடப்பட்டது. இந்த ஆய்வின்போது உணவு பாதுகாப்பு அலுவலர்களாகிய சையத் இப்ராஹிம், மகாதேவன், கந்தவேல் ஆகியோரும் மற்றும் ஆயுதப்படை காவலர்களும் உடனிருந்தனர்.

மேலும் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் R.ரமேஷ்பாபு கூறுகையில்..... திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களோ அல்லது கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களோ அல்லது சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பில் ஈடுபட்டு விற்பனை செய்வது தெரிய வருமாயின் கீழ்கண்ட தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரியபடுத்த வேண்டும் என்றும், தகவல் அளிப்போரின் தகவல் ரகசியம் காக்கப்படும் என்றும் கூறினார்.

மாவட்ட புகார் எண் : 96 26 83 95 95 மாநில புகார் எண் : 94 44 04 23 22

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision