இலை, தழைகளை கட்டிக் கொண்டு அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

இலை, தழைகளை கட்டிக் கொண்டு அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

மத்திய- மாநில அரசுகள் உடனடியாக உர விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும், விவசாயத்திற்கு 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும், விளை பொருள்களுக்கு லாபகரமான விலை வழங்கிட வேண்டும், அகிம்சை வழியில்  டெல்லி சென்று போராட அனுமதி மறுக்கும் காவல்துறையை கண்டித்து திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் தங்கள் உடலில் இலை தழைகளை கட்டிக் கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் அரை நிர்வாணத்துடன் திருச்சி - கரூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட ஊர்வலமாக வந்த போது காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் அங்கு சிறிது நேரம் விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனையடுத்து தங்களது  விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட அனுமதி வழங்க காவல்துறை எங்களுக்கு ஒரு வாரத்திற்குள் அனுமதி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

எங்கள் போராட்டத்திற்கு அனுமதி அளிக்க விட்டால் மீண்டும் எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu