போதை பொருள் கடத்திய பிரபல நியூஸ் தொலைக்காட்சி ஆசிரியர் தம்பி கைது - திருச்சி எஸ்பி அதிரடி
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், புகையிலை, பான் மசாலா பதுக்கி வைத்திருந்தது சம்மந்தமாக இரண்டு பேரை திருச்சி எஸ்பி தனிப்படை போலீசார் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து 18 கிலோ குட்கா பான் மசாலாவை பறிமுதல் செய்துள்ளனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாதேவி பகுதியில் ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிபடை போலீசுக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் அந்த பகுதியில் சோதனை செய்தபோது சோழமாதேவியை சேர்ந்த அசரப்அலி (49) என்பவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட பொருள்களை பதிக்க வைத்திருப்பது தெரியவந்தது
மேலும் அவர் வீட்டில் இருந்து சுமார் 182 கிலோ ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றியதோடு அவரிடம் விசாரணை செய்தபோது தஞ்சை பாபநாசம் அருகே உள்ள பசுபதி கோவிலை சேர்ந்த விக்னேஸ்வரன் (33) என்பவரிடமிருந்து வாங்கி வந்து இந்த பகுதியில் சில்லறை வியாபாரம் செய்து வருவதாக கூறியுள்ளார்.இதனை தொடர்ந்து விக்னேஸ்வரனையும் தனிப்படை போலீசார் கைது செய்ததோடு அவர்கள் இருவரிடமிருந்து இரண்டு இரு சக்கர வாகனம், இரண்டு செல்போன் மற்றும் 28 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து நவல்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அதன் அடிப்படையில் நவல்பட்டு போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி கைது செய்யப்பட்ட இருவரில் விக்னேஸ்வரன் என்பவர் பிரபல செய்தி தொலைக்காட்சியில் பணிபுரியும் செய்தி ஆசிரியர் சகோதரர் என்பது போலீசார் தகவல் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision