நீதி கேட்டு சாலை மறியல் போராட்டம் - எஸ்டிபிஐ கட்சியினர் கைது

நீதி கேட்டு சாலை மறியல் போராட்டம் - எஸ்டிபிஐ கட்சியினர் கைது

உத்தர பிரதேச மாநிலம் லக்மிபூர் கேரி மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிகழ்வின் போது திகோனியா என்னும் ஊரில் திரண்டிருந்த சில விவசாயிகள் மீது பாஜக ஆதரவாளர்களின் கார் மோதியது. அப்போது கோபமடைந்து விவசாயிகள் அந்த காருக்கு தீ வைத்தனர். அங்கு பதற்றமான சூழல் உண்டானது. மேலும் இரண்டு விவசாயிகள் உள்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விவசாயிகள் உயிரிழந்ததற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த கொடுர சம்பவத்திற்கு நீதி வேண்டியும், உத்தரபிரதேச பாஜக அரசை கண்டித்தும் திருச்சி மாவட்டம் SDPI கட்சியினர் காந்தி மார்க்கெட் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு திருச்சி தெற்கு மாவட்ட பொதுசெயலாளர் தமீம் அன்சாரி தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட துணைதலைவர் பிச்சைகனி, மாவட்ட செயலாளர்கள் ஏர்போர்ட் மஜித், மதர் ஜமால், பொருளாலர் சுஹைப், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அப்பாஸ், பகுருதின் ஆகியோர்களும் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர்.

இந்த போராட்டத்தில் கட்சியின் அனைத்து தொகுதி, கிளை, வர்த்தக அணி, தொழிற்சங்க அணி என அனைத்து நிர்வாகிகளும், பொதுமக்களும், சமுக ஆர்வலர்களும் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn