வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கடனுதவி குறித்த ஒருநாள் பயிற்சி

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கடனுதவி குறித்த ஒருநாள் பயிற்சி

தமிழக அரசு உலக வங்கி நிதியுதவியுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் செயல்படுத்தி வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், ஊரக தொழில்களை மேம்படுத்தல், வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முசிறி அந்தநல்லூர் மணப்பாறை மணிகண்டம் மற்றும் துறையூர் வட்டாரங்களைச் சார்ந்த 135 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது ஊரகத் தொழில்களை வளர்க்கவும் மேம்படுத்தவும் நுண் (Nano), குறு (Micro), சிறு (Small) தொழில் முனைவோர்கள் (தனி நபர் மற்றும் குழுக்கள்), உற்பத்தியாளர் குழுக்கள் (Producer Groups), தொழில் குழுக்கள் (Enterprise Groups) மற்றும் உற்பத்தியாளர் கூட்டமைப்புகளை (Producer Collectives) உருவாக்குகிறது. நேற்று (18.08.2022) திருச்சிராப்பள்ளி மாவட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், இனைய மானிய திட்டம் (Matching Grant Program) மூலம் தொழில் முனைவோர்களுக்கு 30% மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கும் பொருட்டு, வங்கி பிரதிநிதிகள் (Bunkers), மாவட்ட பணிக்குழு (District Task Force) வட்டார பணிக்குழு பிரதிநிதிகளுக்கு (Block Task Force) திட்ட அறிக்கை தயாரித்தல், கடன் மதிப்பீடு, கணினி வழி செயல்பாடுகள் குறித்த ஒருநாள் பயிற்சி வழங்கப்பட்டது

நிகழ்ச்சி முன்னதாக வரவேற்பு அளித்து நிகழ்வின் நோக்கத்தைக் குறித்து வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் க.இ.ஆரோன் ஜோஸ்வா ரூஸ்வெல்ட் அவர்கள் விளக்கினார். வி.பிச்சை திட்ட இயக்குந்ர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அவர்கள் தலைமையிலும், கி.ரமேஸ்குமார், திட்ட இயக்குநர் முன்னிலையிலும், ஜெ.பிரபுஜெயகுமார் மோசஸ், பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் அவர்கள் முன்னிலையிலும், எஸ்.சதீஷ்வரன் மேலாளர் மாவட்ட முன்னோடி வங்கி, கலந்து கொண்டு வாழ்துரை வழங்கினார்கள். மேலும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் செயல் அலுவலர் சுரேஷ்குமார், இனை மானிய திட்டம் குறித்து பயிற்சி வழங்கினார். இறுதியாக பி.ஈஸ்வரன்மூர்த்தி கலந்து கொண்டு நன்றியுரை வழங்கினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO