எச்.ராஜா உருவப்படத்தை எரித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

எச்.ராஜா உருவப்படத்தை எரித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியை தேச விரோதி என்று சொன்ன பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பு குழு தலைவர் எச்.ராஜாவை கண்டித்து திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி காங்கிரஸ் கமிட்டியின் மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமை தாங்கினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக தலைவர் எச்.ராஜாவை கண்டித்து அவரது உருவப்படத்தை எரித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செய்தி தொடர்பாளர் வேலுச்சாமி, கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டேல்,

ஐ.டி பிரிவு அரிசி கடை டேவிட், ஓ.பி.சி. பிரிவு மாநில செயலாளர் பூக்கடை பன்னீர்செல்வம், மகளிர் அணி ஷீலா செலஸ்,மனித உரிமை துறை எஸ்.ஆர்.ஆறுமுகம், வளன்ரோஸ் உள்பட பலர் உள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision