காவல்துறை குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் பேட்டி

காவல்துறை குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் பேட்டி

தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் தனியார் துறையினரை கொண்டு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். அதன்படி திருச்சி மாநகர காவல் துறையினர் மற்றும் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி, தஞ்சை,  கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை,  மயிலாடுதுறை உள்ளிட்ட 9 மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் குடும்பத்தினருக்கான இரண்டு நாள் வேலைவாய்ப்பு முகாம் திருச்சி கலையரங்கத்தில் இன்று தொடங்கியது.

காலை தொடங்கிய இம்முகாமில், காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்களின் குடும்பத்தினர் 500 க்கும் மேற்பட்டோர் இம்முகாமில் கலந்து கொண்டனர். கல்வி நிறுவனங்கள், ஓட்டல்கள், ஆட்டோமொபைல், மென்பொருள் நிறுவனன் உள்ளிட்ட 35 நிறுவனங்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு நேர்காணல் நடத்தினர். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மத்திய மண்டல காவல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தினர்.
தொடர்ந்து இது போன்ற வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும் எனவும், காவல்துறை குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Eyd4BfTFH1SEyxmvvYevul

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn