திருச்சி உணவு சேமிப்பு கிடங்கில் எம்.பி ஆய்வு

கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருச்சியில் Central Warehousing Corporation பகுதிக்கு அருகே அமைந்துள்ள பல்வேறு குடியிருப்பு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திருச்சி நாடாளுமன்றத் தொகுதி அலுவலகத்தில் என்னைச் சந்தித்து புகார் மனு அளித்திருந்தனர்.அந்த மனுவில், பொதுத்துறை நிறுவனமான Central Warehousing Corporation சேமிப்பு கிடங்கிலிருந்து, அருகில் இருக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்கு பல்வேறு வகை பூச்சிகள் வருவதுடன், அவை குழந்தைகளின் காது மூக்குகளில் புகுவது, சமையல் செய்யும்போது அதில் விழுந்து விடுவது போன்ற அசெளகரியங்களை தொடர்ந்து சந்திப்பதாகவும் கூறியிருந்தனர்.
70 ஏக்கர் நிலப்பரப்பில் 40 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள சேமிப்பு கிடங்கில் இருந்து உபயோகிக்கும் தண்ணீர் மற்றும் அருகாமையிலுள்ள பகுதிகளிலிருந்து வடியும் நீர் இந்த காலி நிலப்பரப்பில் தேங்கி விடுவதாலும், மழைக்காலத்தில் அதிகப்படியான நீர் இங்கிருந்து தங்களின் குடியிருப்புக்குள் புகுந்து, கழிவு நீரோடு கலந்து துர்நாற்றம் வீசும்வதும், சுகாதாரக் சீர்கேடு ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டினர். இதனால் பல்வேறு சிரமத்தை அனுபவிப்பதாகவும், பாம்புகள் போன்ற விஷச்சந்துகளும் தங்களது குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விடுவதாகவும் சுட்டி காட்டினர். அதனைத் தொடர்ந்து நேற்று (22.02.2025) அந்த Central Warehousing Corporation பொதுத்துறை நிறுவன சேமிப்பு கிடங்கிற்குள் ஆய்வு மேற்கொண்டேன். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த ஆய்வில் அப்படி எந்த பூச்சிகளையும் நான் பார்க்கவில்லை. அங்கு பணியில் இருந்த பொறுப்பாளர்களை அழைத்து, நான் ஆய்வுக்கு வருவதால் ஏதேனும் சிறப்பு ஏற்பாடுகளை செய்து பூச்சிகள் வராமல் பார்த்துக் கொண்டீர்களா என்று கேட்டேன். இல்லை, அப்படி எதுவும் செய்யப்படவில்லை என்று பதில் கூறினர்.
அப்படியே அருகிலுள்ள குடியிருப்பு பகுதிக்குச் சென்று மக்களை அழைத்து, உங்கள் புகாரில் கூறியபடி அங்கு எதுவும் பூச்சிகள் காணப்படவில்லையே என்று தெரிவித்த உடன், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தான் அந்தப் பூச்சிகள் அதிகமாக வருவதாகச் சொன்னார்கள். மேலும் சுகாதாரமற்ற நீர் தேங்கியிருப்பதையும் சுட்டிக்காட்டினார்கள்.
மாலை 5 மணிக்குத் தொடங்கிய எனது ஆய்வும், மக்களோடான கலந்துரையாடலும் இரவு 9 மணியைத் தாண்டி நிறைவை எட்டியபோது, அடுத்த மூன்று மாதங்களில் நான் இதே பகுதிக்கு மீண்டும் ஆய்வுக்கு வருவேன். அப்படி ஏதாவது பூச்சிகள் இருந்து, அதனால் உங்களுக்கு சிரமம் ஏற்படுவது தொடர்ந்தால், நிச்சயம் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு உங்களுக்கு நிரந்தர தீர்வை காண நான் முயற்சிப்பேன் என்று உறுதியளித்தேன். ஒரு மணி நேரம் ஆய்வுக்கும் மூன்று மணி நேரம் குடியிருப்பு வாசிகளோடு நான் கலந்துரையாடுவதற்கும் எடுத்துக்கொண்ட என்னிடம், எங்கள் கோரிக்கைக்காக நீங்கள் உங்கள் பிரதிநிதியாக ஒருவரை அனுப்புவீர்கள் என்றுதான் நாங்கள் எதிர்பார்த்தோம். நாடாளுமன்ற உறுப்பினரான தாங்களே நேரில் வந்து ஆய்வை மேற்கொண்டது மட்டுமல்லாமல், எங்களை அழைத்து இவ்வளவு நேரம் கலந்துரையாடியது, எங்கள் பிரச்சனைக்கு நிச்சயம் நீங்கள் நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தித்தருவீர்கள் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது என்று மகிழ்ச்சி பொங்க எனக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.இந்த நிகழ்வை குடியிருப்புச் சங்கங்களோடு இணைந்து ஏர்போட் பகுதி கழகச் செயலாளர் தம்பி வினோத் அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்.
உடன், கழக துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொஹையா, மாவட்ட செயலாளர்கள் திருச்சி மாநகர் வெல்லமண்டி சோமு, திருச்சி புறநகர் மணவை தமிழ்மாணிக்கம், மாவட்ட துணை செயலாளர் துரை வடிவேல், தலைவர் வைகோ அவர்களின் உதவியாளர் வெ.அடைக்கலம், உறையூர் ஆசிரியர் முருகன், பொன்மலை எஃப்.எஸ். ஜெயசீலன், கீழப் புத்தூர் கரிகாலன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஹக்கீம், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் சுடலைமுத்து, ரோஸ், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் பிரியதர்ஷினி, வட்ட செயலாளர்கள் கல்லுக்குழி பன்னீர், வட்ட செயலாளர்கள் கார்த்திக், அப்துல், ஸ்ரீதர் மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision