கணினி யுகத்தில் மக்களிடம் பக்தி நெறி அதிகரித்துள்ளதாக காஞ்சி மட விஜயேந்திரர் சுவாமிகள் பேட்டி

உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடந்து வரும் கும்பமேளாவில் கலந்துகொண்டு நேற்று(23.02.2025) இரவு திருச்சி வந்த காஞ்சி ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அருகில் சகடபுரம் கிருஷ்ணாநந்த தீர்த்தர்.உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத் தில் நடந்து வரும் கும்பமேளா வில் கலந்து கொண்டு காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமி கள் தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு நேற்றிரவு திரும்பினார்.
அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது: அகில இந்திய அளவில் ஆன்மிக முக்கி யத்துவம் வாய்ந்த புண்ணிய தீர்த்த அடையாளமாக உள்ள அலகாபாத் திரிவேணி சங்கமத் தில் நடைபெறும் கும்பமேளா வில் கலந்து கொண்டு மக்கள் அனைவருக்கும் நற்பலன்கள் கிடைக்க வேண்டும் என பிரார்த்தித்தோம். பிரணவ் மந்திரங்களாக இருக்க கூடிய சரஸ் வதி, கங்கை, யமுனை சங்கமிக்கும் இடத்தில் புனித நீராடுபவர்களுக்கு உயர்ந்த புண்ணியம், சொர்க்கம் கிடைக்கிறது என்று ரிக் வேதம் சொல்கிறது.போகி அன்று தொடங்கி மகாசிவராத்திரி வரை நடைபெறும் கும்பமேளாவில், முக்கிய பிரமுகர்கள் முதல் பாமர மக்கள், சிறிய குழந்தைகள் என பக்தி ஸ்திரத்தையோடு, இதுவரை 62 கோடி பேர் புனித நீராடியதாக வும், ஆயிரத்து 200க்கும் மேற் பட்ட விமானங்கள் வந்து சென் றதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்த இடத்தில் இந்து சம aயத்தின் மேன்மைகள், தன்மை கள் ஒரு சேர பார்க்க முடிகிறது. இந்த கும்பமேளா இந்திய ஒருமைப்பாட்டுக்கும், கலாச்சார பாரம்பரியத்துக்கும், சேவை மனபான்மைக்கும் உதாரணமாக தேசிய திருவிழாவாக திகழ்கறது.கம்ப்யூட்டர் யுகத்திலும் மக்கள் மத்தியில் பக்திநெறி ஆழமாக வேரூன்றி இருக்கிறது, ஆன்மீகநெறிக்கும் பக்திநெறிக்கும் எடுத் துக்காட்டாக கும்பமேளா அமைந்துள்ளது. காஞ்சி மடத்தின் மூலம் அங்கு மண்டபம் அமைத்து, கடந்த 40 நாட்களாக வேதபாட சாலைகள் மூலம் உலக நன்மைக்காக யாகங்கள், பூர்ணாஹூதி ஹோமங்கள், புனித பூஜைகள் மற்றும் அன்ன தானங்கள் நடக்கிறது. அங்கு நடந்த விழாவில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.அப்போது, தென்னாட்டுக் கும், வடநாட்டுக்கும் உள்ள பாரம்பரிய, கலாச்சாரங்கள் மற் றும் வரலாற்று தொடர்புகள் குறித்த கருத்துகள் அவரிடம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அவரை தமிழகத்துக்கு வருமாறு விடுத்த அழைப்பை ஏற்று அதற்கு இசைவு தெரிவித்துள்ளார்". என்றார். சகடபுரம் கிருஷ்ணா நந்த தீர்த்தர் உடனிருந்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision