பண்டிகைக் காலங்கள் வருவதால் திருச்சி கோட்ட ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு- திருச்சி கோட்ட மேலாளர் பேட்டி
அகில இந்திய ரயில்வே பாதுகாப்பு படை துவங்கபட்டு 36 வருடங்கள் நிறைவு பெற்று 37 வது வருட துவக்க விழா இன்று திருச்சியில் கொண்டாடபட்டது. அதன் ஒருபகுதியாக திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை சார்பாக காஜாமலை பயிற்சி பள்ளி வளாகத்தில் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருச்சி கோட்ட இரயில்வே மேலாளர் திரு. மணீஷ் அகர்வால் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் எஸ் ராமகிருஷ்ணன், ஆர்பிஎஸ்எப் கமாண்டன்ட் அஜய் ஜோதி சர்மா, இது பாதுகாப்பு படை பயிற்சி பள்ளியின் முதல்வர் அசோக் குமார் சுக்லா உள்ளிட்ட அதிகாரிகளால் மரக்கன்றுகள் நடப்பட்டது.
மேலும் திருச்சி அரசு மருத்துவமனையில் ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த 22 வீரர்கள் ரத்த தானம் செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மணீஷ் அகர்வால் பண்டிகை காலங்கள் வருவதால் திருச்சி கோட்ட ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பண்டிகை காலங்களில் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படும் அதற்கு ஏற்றார் போல் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO