சுங்கச்சாவடியில் மாதந்திர பாஸ் கட்டணம் 5 ரூபாய் முதல் 25 ரூபாய் உயர்வு - இன்று முதல் அமல்

சுங்கச்சாவடியில் மாதந்திர பாஸ் கட்டணம் 5 ரூபாய் முதல் 25 ரூபாய் உயர்வு - இன்று முதல் அமல்

தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடியில் 1ம் தேதி முதல் மாதாந்த பாஸ் கட்டணம் உயர்த்தபட உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.

அந்த அமைச்சகமே நெடுஞ்சாலைகள் ஆணையம் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் சுங்க கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்து வருகிறது. இந்த சுங்கச்சாவடிகளில் ஒன்றிய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி 1997 ல் போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு சுங்க கட்டண விதி செப்டம்பர் மாதமும், 2008ல் போடப்பட்ட சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

அந்த வகையில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சமயபுரம் சுங்கச்சாவடியில் மாதாந்திர பாஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்தது. வாகனத்தின் வகையைப் பொறுத்து ஒரு மாதந்திர பயணத்திற்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.25 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சலுகை ஒப்பந்தத்தின்படி கட்டண உயர்வு ஆண்டுதோறும் அமலுக்கு வருகிறது.

தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிகள் 2008ன் படி மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் அடிப்படையில் சுங்கச்சாவடி கட்டணம் வழக்கம்போல் செல்லும் மாணவர்களுக்கு சுங்க கட்டணம் உயர்த்தப்படவில்லை மாதந்திர பாஸ் மட்டும் உயர்த்தப்பட்டது. அதன்படி திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சமயபுரம் சுங்கச்சாவடியில் மாதாந்திர சுங்கச்சாவடி பாஸ் கட்டணம் காருக்கு 5 ரூபாயும், எல்சிவி வாகனங்களுக்கு 10 ரூபாயும்,

பேருந்து மற்றும் டிரக் வகை வாகனங்களுக்கு 15 ரூபாயும், கணராக வாகனங்களுக்கு 25 ரூபாயும் மாதாந்திர பாஸ்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தபடவில்லை மாதாந்திர பாஸ்கட்டணம் மட்டுமே உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision