காரை எடுக்க சொன்ன சதீஷ்குமாரை வெட்டிய சாதிக்பாஷா
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பகவதிபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் வைரப் பெருமாள். இவரது மகன் சதீஷ்குமார் இவர் ஆட்டோ டிரைவராகவும் மற்றும் பகவதி அம்மன் மற்றும் விநாயகர் கோவில் பூசாரியாகவும் உள்ளார். இந்த நிலை அதே பகுதியைச் சேர்ந்த அப்துல் மாலிக் மகன் சாதிக் பாஷா (41). இவர் ஆட்டோ டிரைவராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதி குழு உறுப்பினராகவும் உள்ளார்.
இந்த நிலையில் சாதிக் பாட்ஷா தனக்கு சொந்தமான காரை அந்த பகுதியில் உள்ள விநாயகர் கோயில் வாசலில் பக்தர்களுக்கு இடையூறாக தொடர்ந்து நிறுத்தி வருவதாக கூறப்படுகிறது. நேற்று வழக்கம்போல் நிறுத்தியுள்ளார். வரும் 11ஆம் தேதி தைப்பூசம் என்பதால் முருகப் பெருமானுக்கு மாலையிட்டவர்கள் பாதயாத்திரை செல்வதற்காக நேற்று கோவிலுக்கு வருவார்கள். அதனால் கோவில் வாசலில் பக்தர்களுக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள காரை வேறு இடத்தில் மாற்றி நிறுத்துமாறு பூசாரி சதீஷ்குமார் சாதிக் பாஷா வீட்டில் சென்று கூறியுள்ளார்.
இதனால் ஷாதிக் பாஷாவின் மனைவி சாய்தாவிற்கும், சதீஷ்குமாருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சாதிக் பாஷா எப்படி நான் வீட்டில் இல்லாத பொழுது எனது மனைவியிடம் போய் நீ காரை எடுக்க சொல்லி கூறலாம் என கேட்டு சதீஷ்குமாரிடம் தகராறு செய்ததோடு, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சதீஷ்குமார் பகவதி அம்மன் கோவில் உள்ளே சென்ற பொழுது சதீஷ்குமாரை வழிமறித்து சரமாரியாக சாதிக் பாஷா வெட்டி உள்ளான்.
இதில் பலத்த காயமடைந்த சதீஷ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் பற்றி திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டதோடு சதீஷ்குமாரை வெட்டிய அரிவாள் பகவதி அம்மன் கோவில் அருகே கிடந்துள்ளது. அந்த அருவாளை போலீசார் கைப்பற்றியதோடு இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision