திருச்சியில் விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பாக காவல் துறை ஆலோசனை கூட்டம்
திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, நேற்று (06.09.23)-ந் தேதி திருச்சி மாநகர காவல் ஆணையகரத்தில் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் தெற்கு மற்றும் தலைமையிடம், அனைத்து சரக காவல் உதவி ஆணையர்கள், அனைத்து சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர்களுடன் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் சிலை கரைப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இதில் திருச்சி மாநகரில் (18.09.23) அன்று நடைபெறவிருக்கும் விநாயகர் சதுர்த்தி விழா (சிலை பிரதிஷ்டை) மற்றும் ஊர்வலத்தின் போது முக்கிய சந்திப்புகள் மற்றும் பிரச்சனைக்குரிய இடங்கள் கண்டறியப்பட்டு எவ்வித அசம்பாவிதமும் நடைபெறா வண்ணம் நடத்திட பாதுகாப்பு முன்னேற்பாடுகள் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் விநாயகர் ஊர்வலம் (விசர்ஜன ஊர்வலம்) நடைபெறும் 20.09.23-ந் தேதி பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் எவ்வித இடையூறின்றி ஊர்வலம் செல்லவும், அதன் வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பது குறித்தும், விநாயகர் சிலைகளை கரைக்கும் இடங்களில் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.
மேலும் அனைத்து காவல் உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு சம்மந்தப்பட்ட காவல் நிலைய எல்லையில் உள்ள இந்து அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பிற மதத்தை சார்ந்த முக்கிய நபர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தியும், திருச்சி மாநகரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது மத நல்லிணக்கத்தை பேணி பாதுகாக்கவும், சட்டம் ஒழுங்கை பாதுகாத்து, அமைதியான முறையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தினை நடத்திட திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் அறிவுரை வழங்கினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision