சிவில் வழக்குகள் சிறப்பு முகாம் - 5 லட்சத்து 41 ஆயிரம் அபராத தொகை வசூல்
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் M.பிரதீப்குமார் அறிவுறுத்தலின் பேரிலும் மாவட்ட வருவாய் அலுவலர் R.இராஜலெட்சுமி தலைமையில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் உணவு பாதுகாப்பு துறையில் கடந்த மூன்று வருடங்களாக சுமார் 460 சிவில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த வழக்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தலின் பேரில் சிவில் வழக்கினை முடிப்பதற்கு சிறப்பு முகாம் போடப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று நடத்தப்பட்டது. இந்த முகாமில் சுமார் 900 நபர்கள் கலந்து கொண்டனர். இதில் சுமார் 460 மொத்த வழக்குகளில், 257 வழக்குகள் முடிவுற்றது. மீதம் 122 வழக்குகள் பாதி அளவு முடிக்கப்பட்டுள்ளது.
இதில் மொத்தம் 20,00,000/- (ரூபாய் இருபது இலட்சம்) அபராதம் விதிக்கப்பட்டு அதில் உடனடியாக அதே இடத்தில் 5,41,000/- (ரூபாய் ஐந்து இலட்சத்தி நாற்பத்தி ஓராயிரம்) அபராத தொகை அரசு கருவூல கணக்கில் செலுத்தப்பட்டது.
மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் கூறுகையில்..... இதுபோன்று உணவு கலப்படத்தில் ஈடுபடும் உணவு வணிகர்களும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் மீது இனி வருங்காலங்களில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். எனவே, உணவு வணிகர்களும் இதுபோன்று தாங்கள் விற்பனை செய்யும் உணவுகளில் உணவு கலப்படங்கள் இல்லாமல் விற்பனை செய்ய கேட்டுக்கொண்டார்.
இதில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.ஆர்.ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு பாண்டி, செல்வராஜ், இப்ராஷிம், பொன்ராஜ், சண்முகசுந்தரம், மகாதேவன், அன்புச்செல்வன், வடிவேல், ராஜகுமாரி, ஹர்ஷவர்தினி, ஷீபா ப்ரீத்தி மற்றும் சரண்யா ஆகியோர் பங்கேற்றனர்.
இதுபோன்று பொதுமக்களும் உணவு சம்பந்தமான கலப்படங்கள் மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட உணவு பொருட்களை தாங்கள் பகுதிகளில் கண்டறியப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம் என்று கூறினார். தகவல் கொடுப்பவரின் விபரம் இரகசியம் காக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
புகார் எண் : 96 26 83 95 95
மாநில புகார் எண் : 9444042322
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision