திருச்சி சிறுகனூரில் விடியலுக்கான முழக்க திமுக பொது கூட்டம் 

திருச்சி சிறுகனூரில் விடியலுக்கான முழக்க திமுக பொது கூட்டம் 

திருச்சி மாவட்டம் சிறுகனூரில்  மாநாடு நடைபெற திட்டமிடப்பட்டிருந்த இடத்தில் மாநாடு போன்ற சிறப்பு "விடியலுக்கான முழக்கம்" பொதுக்கூட்டம் இன்று  நடைபெற உள்ளது.  சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக திருச்சியில் 11வது மாநில மாநாடு நடைபெறவிருந்த நிலையில் தேர்தல் நடைபெறுவதற்கான  தேதிகள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து மாநாட்டை சிறப்பு பொதுக் கூட்டமாக நடத்த தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.


இதற்காக சிறுகனூரில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடத்தில் கழக முதன்மை செயலாளர் கே.என்.நேரு  தலைமையில் விறுவிறுப்பாக பணிகள் நடந்த முடிந்தது.
பொதுக்கூட்ட மேடை மற்றும் பார்வையாளர்கள் அமரும் பகுதி மட்டும் 369 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது.சிறப்பு பொதுக் கூட்ட நிகழ்வுகளை ஒளிபரப்ப 300 அடி பிரம்மாண்டமான எல்இடி திரை அமைக்கப்பட்டுள்ளது.

மூன்று  மேடைகள் அமைைக்கபட்டுள்ளது.தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்டவர்கள் நடுவில் உள்ள மேடையிலும் இடது புறம் சட்டமன்ற உறுப்பினர்கள் வலது புற மேடையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அமரும் வகையில் அமைக்கப்பட்ள்ளது.
திமுகவை ஆட்சியில் அமர்த்தவும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை முதல்வராக பதவி ஏற்பதற்கான முன்னோட்டமாக இந்த நிகழ்வு நடைபெறுவதாக கழகத்தின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 

இந்த மாபெரும் நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் காலை 11.30 மணிக்கு 90 அடி உயர கொடி கம்பத்தில் திமுக கொடியேற்றி பொதுக்கூட்டத்தை துவக்கி வைக்கிறார். இதனை தொடர்ந்து கல்வி,சமூகநீதி,வேளாண்மை உள்ளிட்ட தலைப்புகளில் அறிஞர்கள் வல்லுநர்கள் உரையாற்றுகிறார்கள். மாலை 5.30 மணிக்கு மேல் திமுக தலைவர் ஸ்டாலின் மாலை நிகழ்ச்சிக்கு வருகை புரிகிறார். அதன் பின்னர் முக்கியமான லட்சியப் பிரகடனத்தை வெளியிட இருக்கிறார்.அடுத்த  10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வை செயல் திட்டங்களை வெளியிட உள்ளார்.

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் அனைத்து துறைகளும் முதல் இடத்தை பெறக்கூடிய வகையில் தமிழ்நாட்டை கட்டமைப்பதற்கான தலைவரின் மாபெரும் கனவு திட்டம் அறிவிக்கப்பட உள்ளது.
சிறப்பு பொதுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை இதுவரை இல்லாத வகையில் பிரம்மாண்டமாக கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள்  ஏற்பாடு செய்துள்ளனர். 


திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I