நல்ல சாலைகளை மீண்டும் சீரமைக்கும் திருச்சி மாநகராட்சி- ஆத்திரத்தில்  பொதுமக்கள் 

நல்ல சாலைகளை மீண்டும் சீரமைக்கும் திருச்சி மாநகராட்சி- ஆத்திரத்தில்  பொதுமக்கள் 

திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட 20 க்கும்  மேற்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதற்காக சுமார் 5.5 கோடி அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள பொதுமக்கள் இது பற்றி  தெரிவித்துள்ள கருத்து யாதெனில், ஏற்கனவே இங்கு உள்ள சாலைகள் சரியானதாகவும் நல்ல தரமானதாகவும் இருக்கின்றது கிட்டத்தட்ட இந்த சாலை சீரமைக்கும் பணிகள் திருவடி நகர் ,EVS தெரு மற்றும் ரங்க நகர் போன்ற பகுதிகளில் தான்
 இந்த சீரமைப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது .

ஆனால் இங்கு உள்ள சாலைகள் ஏற்கனவே நன்றாக இருப்பதாகவும்  மேலும் இதனை சீரமைக்கும் போது அதனுடைய உயரம் அதிகரித்துப் அருகிலுள்ள   மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது ஸ்ரீரங்கம் தொகுதியை பொறுத்தவரை சாலைகள் அனைத்தும் நன்றாகத்தான் இருக்கின்றது.

சாலையின் உயரத்தை மேலும் மேலும் சீரமைத்து சீரமைத்து அதனுடைய மேற்பரப்பை உயரமாக்கும் பொழுது அருகில் உள்ள வீடுகள் பள்ளம் ஆகின்றன. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் நுழைவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்,  ரயில்வே ஸ்டேஷன் ரோடு மற்றும் அடையவளஞ்சான் ,சாஸ்திரி ரோடு மற்றும் அண்ணா நகர் போன்ற பகுதிகளில்    சாலைகள்  மேடு பள்ளங்கள் நிறைந்த சாலைகளாக  இருக்கின்றன அவற்றை சரிசெய்யாமல் சரியாக உள்ள சாலையை இந்த நேரத்தில் சரிசெய்வது மக்களின் பணத்தை வீணடிப்பப்பதாகவே தான் உள்ளது.    மக்களின் வரிப்பணத்தை தேவையற்ற முறையில் செலவு செய்யாமல்    பழுதடைந்த சாலைகள் உள்ள பகுதிகளை கண்டறிந்து அங்கு சீர் அமைக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர் .மக்களின் பயன்பாட்டை அறிந்து மக்களின் குறைகளை தீர்த்து வைக்காமல் மக்களின் வரி பணத்தை இப்படியும் வீணடிப்பது தவறாகும் .தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இதுபோன்ற செயல்கள் மக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது .

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I