இடிந்து விழுந்த ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல் கோபுரத்தை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு

இடிந்து விழுந்த ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல் கோபுரத்தை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் கிழக்கு வாசல் பகுதியில் உள்ள கோபுரத்தின் ஒரு பகுதி நேற்று நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சுற்றுலா பண்பாட்டு அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் மணிவாசன் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன் ஸ்ரீரங்கத்துக்கு வந்து இடிந்து விழுந்த கோபுர பகுதிகளை , பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர், தொழில்நுட்ப வல்லுனர்களிடம் ஆலோசனை பெற்று மராமத்து பணிகளை மேற்கொள்ள கோவில் நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது தலைமை பொறியாளர் இசையரசன், தலைமை செயற்பொறியாளர் செல்வராஜ், ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் சிவராம்குமார், திருச்சி மண்டல இணை ஆணையர் பிரகாஷ், திருச்சி மண்டல செயற்பொறியாளர் தியாகராஜன் மற்றும் கோயில் பொறியாளர்கள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn