திருச்சி மாநகர அரசு பேருந்து மோதி மனைவி பலி, கணவர் படுகாயம்.

திருச்சி மாநகர அரசு பேருந்து மோதி மனைவி பலி, கணவர் படுகாயம்.

திருச்சி ஸ்ரீரங்கம் கணபதி நகரை தமிழ்ச்செல்வன் (52) சேர்ந்தவர். இவரது மனைவி மீனாட்சி (49). இருவரும் மாம்பழச் சாலையில் சிக்னலில் இருந்து இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அங்கு போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் வசூலித்து கொண்டிருந்தனர். அங்கு அதிகமான வாகனங்களை போக்குவரத்து போலீசார் நிறுத்தி வைத்திருந்ததால்,

அவ்வாகனங்களை கடந்து செல்லும்போது எதிரே வந்த அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த மீனாட்சி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது கணவர் தமிழ்ச்செல்வன் தலைகவசம் அணிந்திருந்ததால் லோசான காயங்களுடன் உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் துறை ஆணையர் ஆகியோருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் வழக்குரை எம் சரவணன் மனு அளித்துள்ளார். அம்மனுவில்....... திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை சிக்னலில் இதுபோல் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர்கள் பலியாகின்றது. இதனை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாம்பழசாலை சிக்னல் முதல் காவேரி பாலம் துவங்குவது வரை நடுவில் தடுப்பு அமைக்க வேண்டும்.

அப்படி அமைத்தால் இதுபோல் விபத்து ஏற்படுவது குறைய வாய்ப்புள்ளது. எனவே வருங்காலங்களில் இது போல் நடக்காமல் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பிலும் காங்கிரஸ் கட்சி சார்பிலும் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision