திருச்சியில் சுங்கச்சாவடி அமைக்கும் பணி - சட்டப்பேரவையில் அமைச்சர் கோரிக்கை

திருச்சியில் சுங்கச்சாவடி அமைக்கும் பணி - சட்டப்பேரவையில் அமைச்சர் கோரிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று, கேள்வி நேரத்தின் போது, பள்ளிக்கல்வித்துறை தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கும் முன்னர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தமது தொகுதிக்குட்பட்ட துவாக்குடியில் இருந்து விமான நிலையம் வரை செல்கிற அரை வட்டப் பகுதியில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) சுங்கச்சாவடி அமைக்கும் பணியில் இறங்கியிருப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும்!" என வேண்டுகோள் விடுத்தார்.

சட்டப்பேரவையில் இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி குறிப்பிட்டதாவது...... என்னுடைய தொகுதியில் இருக்கின்ற துவாக்குடியில் இருந்து விமான நிலையம் வரை செல்கின்ற அரை வட்டப் பகுதியில் இருக்கின்ற, NHAI மூலமாக ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற Toll Gate, அதில் வசூல் செய்கின்ற பணியில் இன்றைக்கு ஒன்றிய அரசு இறங்கியிருக்கிறது. அதைக்கூட, இன்னும் இரண்டு நாட்களில் மாற்றுக் கட்சியைச் சார்ந்திருக்கின்றவர்கள் ஓர் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக நான் கேள்விப்பட்டேன்.

மாற்றுக் கட்சியாக இருந்தாலும், அவர்களும் எங்களுடைய தொகுதி மக்கள் தான் என்கின்ற வகையில், அதை உடனடியாகத் தடுத்து நிறுத்துகின்ற பணியில் நம்முடைய பொதுப்பணித் துறை அமைச்சர், NHAIயைச் சார்ந்திருக்கின்ற அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்கின்ற வேண்டுகோளை வைக்கிறேன்.

எனது தொகுதியைச் சார்ந்த ஒரு பிரச்சினையை நம்முடைய பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவர நான் கடமைப்பட்டிருக்கிறேன். என்று பொதுப்பணித்துறை அமைச்சருக்கு, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சுங்கச்சாவடி அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்துவீர்! என வலியுறுத்தனார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision