விடுமுறை நாட்களுக்கு கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க அறிவிப்பு

விடுமுறை நாட்களுக்கு கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க அறிவிப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்லிட், கும்பகோணம் கோட்டம் சார்பில், (21.10.2023), (22.10.2023), சனி, ஞாயிறு வார விடுமுறை, (23,10.2023) ஆயுத பூஜை, (24.10.2023) விஜய தசமி என தொடர் விடுமுறையையொட்டி, பொது மக்களின் வசதிக்காக, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து திருச்சி,

கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர். மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு 300 பேருந்துகளும், திருச்சியிலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும். திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு 200 பேருந்துகள் என கூடுதலாக (20.10.2023), (21.10.2023) மற்றும் (22.10.2023) வெள்ளி, சனி, ஞாயிறு, நாட்களில் மொத்தம் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

அதே போன்று மேற்படி விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல (24.10.2023) மற்றும் (25.10.2023) செவ்வாய், புதன் நாட்களில் சென்னை தடத்தில் 300 சிறப்பு பேருந்துகளும், பிறத்தடங்களிலும் 200 சிறப்பு பேருந்துகளும், இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விடுமுறை முடிந்து பயணிகள் திரும்ப செல்ல (24.10.2023) மற்றும் (25.10.2023) செவ்வாய், புதன் நாட்களில் திருச்சியிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 1 மணி வரையிலும், பெரம்பலூர், ஜெயங்கொண்டம்,அரியலூரிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 2 மணி வரையிலும், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, வேதாரணியம், திருவாரூர்.

மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு இரவு 10 மணி வரையிலும், இராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு இரவு 9:20 மணி வரையிலும், பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

(20.10.2023), (21.10.2023) மற்றும் 22102023 தொடர் விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

.

முன்பதிவு செய்வதன் மூலம் எந்த சிரமமும் இன்றி பயணிப்பதோடு பயணிப்பவர்களின் தேவையை போக்குவரத்துக் கழகங்கள் கணித்து அதற்கேற்ப பேருந்து சேவையை அளிக்க ஏதுவாகும் மற்றும் அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் முக்கிய நகரங்களுக்கிடையே இயக்கப்படும் பேருந்துகளுக்கும் முன்பதிவு சேவை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் www.tnstcin இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் மொபைல் ஆப் (Mobile App) Android / 1 phone கைபேசி மூலமாகவும் கீழ்க்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தி முன் பதிவு செய்து கொள்ளலாம்.


Step 1: பொதுமக்கள் மொபைல் ஆப் மூலமாக Ticket முன்பதிவு செய்யும் முறைகள் Google play stone ல் -TNSTCAPP என Type செய்து அதனை மொபைலில் நிறுவ Installi வேண்டும். (TNSTC OFFICIAL APP|  Step 2 :  பின் அதனை Open செய்து தங்களது விருப்ப மொழியை தேர்வு செய்யவும். Step 3 : அதில் பயணச்சீட்டு முன்பதிவு பயணச்சீட்டு ரத்து செய்ய பயணச்சீட்டுபார்வையிட, பயணியின் தகவல்கள், பயணச்சீட்டு விவரம் மற்றும் திரும்பப் பெறுதல் / பரிவர்த்தனை நிலை என Options இருக்கும்.

Step 4 : அதில் முன்னோக்கி பயணம் அல்லது திரும்பும் பயணம் தேர்வு செய்து பின் புறப்படும் இடம், சேரும் இடம், பயண தேதி, ஆண்கள்), பெண்கள், குழந்தை (ஆண்) மற்றும்குழந்தை (பெண்) விவரம் கொடுத்து |தேடல்]பட்டன் கிளிக் செய்யவும். Step 4 :  புறப்படும் இடம், சேரும் இடம் மற்றும் பயண தேதியில் முன்பதிவு செய்ய காலியாக உள்ள பேருந்துகள் விவரம் பட்டியலிடப்படும். அதில் தேவையான நேரத்திற்கு பேருந்து தேர்வு செய்து தேவையான இருக்கைகளும் தேர்வு செய்ய வேண்டும். Step 5 : அடுத்ததாக பயணிகள் விவரம், பெயர், வயது, தொலைபேசி, மின்னஞ்சல் முகவரி மற்றும் அடையாள அட்டை விவரங்கள் சமர்ப்பிக்கபட வேண்டும்.

Step 5 : எல்லாம் முடித்த பிறகு Credit card / Internet Banking மூலம் பயண கட்டணம் செலுத்தி பயண சீட்டை DOWNLOAD செய்து கொள்ளலாம். மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பேருந்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி இப்பேருந்து வசதியை பயன்படுத்திக்கொள்ள வேணுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision