ஏடிஎம் கார்டு : ரூபாய் 5 லட்சம் இலவச பலன் தெரியுமா?

ஏடிஎம் கார்டு : ரூபாய் 5 லட்சம் இலவச பலன் தெரியுமா?

நாம் எப்போது வங்கிக் கணக்கைத் திறக்கிறோமோ, அப்பொழுதே அந்தக் கணக்கில் டெபிட் கார்டும் வரை அனைத்திலும் இது மக்களுக்கு உதவுகிறது. ஆனால் பணம் எடுப்பதைத் தவிர, ஏடிஎம் கார்டுகளின் சில நன்மைகள் நமக்குத் தெரியாது என்பதுதான் உண்மை. இந்த நன்மை ஏடிஎம் கார்டுகளில் கிடைக்கும் காப்பீடு பற்றியது இதனை நீங்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஏடிஎம் கார்டுகளில் வாடிக்கையாளர்கள் ரூபாய் 25 ஆயிரத்தில் இருந்து ரூபாய் 5 லட்சம் வரையிலான காப்பீட்டுப் பலன்களைப் பெறுகிறார்கள். இது சாதாரண மக்களுக்குத் தெரியாது. இதன் காரணமாக, இந்த பெரிய பலனை அவரால் பயன்படுத்த முடியவில்லை.

யாருக்கு பலன் கிடைக்கும்?

குறைந்தபட்சம் 45 நாட்களுக்கு ஒரு முறை ஏடிஎம் கார்டைப் பயன்படுத்துபவர்கள் மட்டுமே ஏடிஎம் கார்டு காப்பீட்டின் பலனைப் பெறுவார்கள். இந்த வசதியை எந்த அரசு அல்லது அரசு சாரா வங்கியின் ஏடிஎம் கார்டில் காணலாம். இதனுடன், உங்கள் ஏடிஎம் கார்டு எந்த வகையைச் சேர்ந்தது என்பதைப் பொறுத்து நீங்கள் பெறும் காப்பீட்டுப் பலன்களின் அளவும் இருக்கும். அட்டைகளுக்கு தகுந்தாற்போல பலன்கள் கிடைக்கிறது... ஏடிஎம் கார்டின் வகையைப் பொறுத்து காப்பீட்டுத் தொகை தீர்மானிக்கப்படுகிறது.

கிளாசிக் கார்டுக்கு ரூபாய் ஒரு லட்சமும், பிளாட்டினம் கார்டுக்கு ரூபாய் 2 லட்சமும், சாதாரண மாஸ்டர் கார்டுக்கு ரூபாய் 50 ஆயிரமும், பிளாட்டினம் மாஸ்டர் கார்டில் ரூபாய் 5 லட்சமும், விசா கார்டுக்கு ரூபாய் 1.5 முதல் 2 லட்சம் வரையிலும் காப்பீடு கவரேஜ் கிடைக்கும். பிரதான் மந்திரி ஜன்தன் கணக்குகளில் கிடைக்கும் RuPay கார்டு மூலம், வாடிக்கையாளர்கள் ரூபாய் 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை காப்பீட்டுத் தொகையைப் பெறுகிறார்கள். ஒருவர் விபத்தில் இறந்தால், அத்தகைய சூழ்நிலையில் அவரது குடும்பம் 5 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டு பலனைப் பெறலாம்.

சரி எப்படிப்பெறலாம் என்பதுதானே உங்கள் அடுத்த கேள்வி?

ஏடிஎம் கார்டுதாரர் விபத்தில் மரணம் அடைந்தால், கார்டுதாரரின் நாமினி அந்த நபர் கணக்கு வைத்திருக்கும் வங்கிக் கிளைக்குச் சென்று இழப்பீட்டுத் தொகைக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். தேவையான ஆவணங்களை வங்கியில் சமர்ப்பித்த பிறகு, நாமினி காப்பீட்டுக் கோரிக்கையைப் பெறலாம், வங்கியின் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்திய 45 நாட்களுக்குள் மரணம் அல்லது விபத்து ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நபரைச் சார்ந்தவர்கள் காப்பீட்டுக் கொள்கையின் கீழ் இழப்பீடு கோரலாம்.

மிக முக்கியமான விஷயம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். செத்தும் கெடுத்தான் சீதகாதி என சொல்வதை விடுத்து செத்தும் கொடுத்தான் சீதகாதி என இனி சொல்லுங்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision