பசுமை காக்க பயணம் - தமிழகத்தின் 9 மாவட்டங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்ட திருச்சி அமைப்பினர்!!

பசுமை காக்க பயணம் - தமிழகத்தின் 9 மாவட்டங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்ட திருச்சி அமைப்பினர்!!

திருச்சியை சேர்ந்த ஒரு அமைப்பினர் தமிழகத்தின் சுமார் 9 மாவட்டங்களில் இதுவரை 2250 மரக்கன்றுகளை நட்டு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர். இதுகுறித்த சிறப்பு தொகுப்பு தான் இது!

Advertisement

திருச்சி EMPOWER டிரஸ்ட், மஹிந்திரா பைனான்ஸ் மற்றும் மஹிந்திரா ஹோம் பைனான்ஸ் உடன் இணைந்து மரம் நடும் திட்டம் - 2020 என்ற நோக்கில் கடந்த மாதம் முதல் இதுவரை 2250 மரக்கன்றுகளை திருச்சி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், சேலம், கடலூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நட்டுள்ளனர்

குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் Seshasaye நிறுவனத்தில் 150 மரக்கன்றுகளும், திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுக்கா, T.கல்லிக்குளம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 200 மரக்கன்றுகளும், மதுரை மாவட்டம், திருவாதவூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ள சென்ட்ரல் பிளாஸ்டிக் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி நிறுவனத்தில் 300 மரக்கன்றுகளும், மேலூர் அரசு கலைக்கல்லூரியில் 250 மரக்கன்றுகளும், திண்டுக்கல் மாவட்டம், K.சிங்கார கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள பண்ணைக்காடு வீரம்மாள் பரமசிவம் கல்லூரியில் 250 மரக்கன்றுகளும், சேலம் மாவட்டம் வேப்பம்பூண்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 200 மரக்கன்றுகளும், கோவிந்தம்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 175 மரக்கன்றுகள், மற்றும் வெள்ளையூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 125 மரக்கன்றுகளும் அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 150 மரக்கன்றுகள், தஞ்சாவூர் மாவட்டம், பில்லுவேட்டுவிடுதியில் நவீநா மேல்நிலைப்பள்ளியில் 150 மரக்கன்றுகள், காஞ்சிபுரம் மாவட்டம், புளியம்பாக்கதில் உள்ள லார்டு வெங்கடேஸ்வரா இன்ஜினியரிங் கல்லூரியில் 150 மரக்கன்றுகளும், செங்கல்பட்டு மாவட்டம், பாலூர் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் 150 மரக்கன்றுகள் என மொத்தம் 2250 மரக்கன்றுகள் நட்டு திருச்சி அமைப்பினர் சாதனை புரிந்துள்ளனர்.

Advertisement

இதில் தேக்கு, சொர்க்கம், நீர்மருது, நவல், புங்கன், மலைவேம்பு, பூவரசு, நெல்லி, பாதாம், வேங்கை, சந்தனம், மஞ்சள் கொண்ணை, சிகப்பு கொன்னை, இல்லுப்ப மரம், நாட்டு வேம்பு, துகில் வாகை, பலா, நெட்டிலிங்க மரம், செம்மரம், சீதா மரம் மற்றும் அத்தி போன்ற மர வகைகள் நடப்பட்டது.  

இதில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், மற்றும் அலுவலக பணியாளர்கள் பங்கு கொண்டு தங்களது வளாகம் பசுமையான வளாகமாக மாற்ற உறுதியளித்தனர்.  

இந்த மாவட்டங்களில் பயணங்கள் அனைத்தையும் EMPOWER TRUST நிர்வாக இயக்குநர் P. கனிமொழி, தமிழ்நாடு மனிதவள துறை, மஹிந்திரா பைனான்ஸ், S. கார்த்திகேயன், மனிதவள துறை மேலாளர், சென்னை மஹிந்திரா ஹோம் பைனான்ஸ், S.S. கோகுல் நாதன், மனிதவள துறை மேலாளர், கோயம்புத்தூர் மஹிந்திரா ஹோம் பைனான்ஸ், ராஜேஷ் ரத்தினசபாபதி ஆகியோர் வழிகாட்டுதலின்படி 9 மாவட்டங்களில் பசுமையை காக்க பயணம் எடுத்து வைத்துள்ளனர்.

மேலும் இந்நிகழ்வில் மஹிந்திரா பைனான்ஸ் மற்றும் மஹிந்திரா ஹோம் பைனான்ஸ் சார்பில் மண்டல மேலாளர்கள் மற்றும் கிளை மேலாளர்கள், EMPOWER டிரஸ்ட் சார்பில் அனுசுயா தேவி, மாணிக்கவாசகம், நந்தினி, ஹரிஹரன், மகேந்திரன், கவியரசன், மூர்த்தி, புஷ்ப பாரதி மற்றும் சதீஷ் ஆகியோர் தன்னார்வலர்கள் என அனைவரும் மரம் நடும் திட்டத்தில் பங்கு கொண்டனர்.