தூதுவளை சோப்பு முதல் ஆவாரம் பூ ஹேர் ஆயில் வரை ....இயற்கை பொருட்கள் தயாரிப்பில் அசத்தும் அனுஅரவிந்த்

தூதுவளை சோப்பு முதல் ஆவாரம் பூ ஹேர் ஆயில் வரை ....இயற்கை பொருட்கள் தயாரிப்பில் அசத்தும் அனுஅரவிந்த்

இயற்கை மற்றும் உடலுக்கு கேடுவிளைவிக்காத பொருட்களை தற்போது மக்கள் விரும்பத் தொடங்கிவிட்டனர். அன்றாடம் உபயோகிக்கும் சோப், ஷாம்பூ, வீட்டைத் துடைக்கப் பயன்படுத்தும் க்ளீனிங் லிக்விட், கொசுவிரட்டி என பலவற்றில் தீங்கு விளைவிக்கும் வேதியியல் பொருட்கள் சேர்க்காதவற்றையே பலரும் விரும்புகிறார்கள்.

கடைகளில் தயாரிக்கப்படும் குளியல் சோப்புகள் அதிக நாட்கள் விற்பனைக்கு இருக்க வேண்டும். மக்களை கவர நறுமணம் வேண்டும், அழுக்குகளை நீக்கி பளிச்சென காட்ட வேண்டும் என்பதற்காகவும் செயற்கையான முறையில் ஏராளமான வேதிப்பொருட்களை சேர்க்கிறார்கள். எனவே, இயற்கையான முறையில் குளியல் சோப் தயாரித்து ஆரோக்கியமாகவும், அப்பொருட்களை விற்பனை செய்து நிரந்தர வருமானத்தையும் பார்க்க முடியும் என்கிறார் திருச்சியை சேர்ந்த அணு அரவிந்த்.

என்னுடைய பெயர் அனு Mtech  படித்துள்ளேன்.  திருச்சி - சென்னை பைபாஸில் உள்ள ஏ ஆர் கே நகரில் வசித்து வருகிறேன். நான் திறமையை வெளிக்காட்ட ஏதாவது ஒன்றில்  சாதிக்க வேண்டும் என்று எண்ணி  2015 முதல் பொழுதுபோக்காக தொடங்கியது நாளடைவில் இதனுடைய முக்கியத்துவம் அறிந்து இதனையே என்னுடைய அடையாளமாக மாற்ற முயற்சித்தேன். இன்று True bubbles (Rooted in purity ) நிறுவனமாக ஒரு தொழில் முனைவர் என்ற அடையாளத்தையும் உருவாக்கியுள்ளேன்...  

தொடர்ந்து பேசிய அனு.... முழுமையாக இயற்கையாக மட்டுமே செய்ய வேண்டும் என்பதற்கான தனி காரணமும் உண்டு என்னுடைய உறவினர் ஒருவர் அதிகப்படியான வேதிப்பொருட்கள் அடங்கிய அழகு சாதன பொருட்கள் பயன்படுத்தியதால் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் இறந்திடும் சூழல் ஏற்பட்டது. அவரின் மரணம் என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது நாம் மட்டும் இன்றி நமது அடுத்த தலைமுறையும் இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும். குறிப்பாக அழகு சாதனப் பொருட்களில் கலக்கப்படும் அனைத்து வேதிக பொருட்களும் இல்லாமல் நம் அருகில் உள்ள இயற்கை பொருட்களை பயன்படுத்தி தயாரிக்க தொடங்கினேன் ..

வெண்ணெய், நெய் போன்றவற்றை மட்டுமே அதிகமாக பயன்படுத்துகிறோம்.  இயற்கையாக கிடைக்கும் தூதுவளை, கற்றாழை, ஆவாரம் பூ, கேரட், பீட்ரூட், சங்குப்பூ, ரோஜா இதழ்கள் போன்றவற்றை நம்மை சுற்றி கிடைக்கும் அனைத்து பொருட்களையும் பயன்படுத்தியே குறைந்த பொருட்களின் மூலம் அழகை மேம்படுத்திக் கொள்ளவும், சருமத்தை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் என்னுடைய தயாரிப்புகளை செய்து வருகிறேன்...

 50க்கும் மேற்பட்ட வகையான சோப்புகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்து வருகிறேன். இதில் எவ்வித வேதிப்பொருட்களும் பயன்படுத்துவதில்லை. குடும்பம் வேலை இரண்டையும் சமாளித்துக் கொள்வது சற்று சவாலாக இருந்தாலும், பிடித்தவற்றை செய்யும் பொழுது அதற்கான நேரத்தை நம்மால் சரியான முறையில் நேர மேலாண்மையை பயன்படுத்திக்கொள்ள முடியும். என்னுடைய கல்வியும் என்னுடைய குடும்பமும் அதற்கு உறுதுணையாகவும் இருந்தது. நான் தயாரித்து வழங்கும் அனைவராலும் விரும்பக்கூடிய மிக முக்கிய ஒன்று நாட்டு மாட்டு நெய்யிலிருந்து தயாரிக்க கூடிய (Shata Dhauta Ghrita(SDG) ஆகும்.

இன்று பலரிடமிருந்து நல்ல வரவேற்பு பெற்று அதிக அளவில் விற்பனையும் செய்து வருகிறேன் . பலரின் நம்பிக்கையும் அவர்கள் அளித்த ஊக்கமும் கடந்தஆண்டு  ஆசியாவில் சிறந்த 100 Influential பெண்களில்  ஒருவராகவும் சிறந்த ஆர்டிசியன்  ஆகவும் தேர்வு செய்யப்பட்டேன். ஆண்களுக்கு அவங்களோட கனவை துரத்திப் பிடிக்கும் வாய்ப்பையும் நேரத்தையும் அதிகமா கொடுக்குற உலகம், பெண்களுக்கு அப்படி கொடுக்குறதில்ல. நம்ம கனவு, லட்சியம் எல்லாம் கல்யாணம், குழந்தை, குடும்பம்னு ஆகும்போது தேய்ந்துகொண்டே வரும்தான். இருந்தாலும், அதை எப்போ வேணாலும் நம்மால மீட்க முடியும் என்றார் அனு ...

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision