சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை விவரம்

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை விவரம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் புகழ் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்தும் மற்றும் அயல்நாடுகளில் இருந்தும் வந்து நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும், முதன்மையானதுமான சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து தங்களது நேர்த்தி கடனாக அழகு குத்தியும் தீச்சட்டி ஏந்தியும் கோவில் உண்டியல்களில் காணிக்கை செலுத்தி விட்டு செல்வார்கள்.

கடந்த 15 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை உண்டியல்களை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில், தன்னாலர்கள், வங்கி ஊழியர்களால் கோவில் மண்டபத்தில் எண்ணப்பட்டது. இதில் ஒரு கோடியே 33 லட்சத்து, 67, 737 ரூபாய் ரொக்கமும், 2 கிலோ 842 கிராம் தங்கம், 4 கிலோ 383 கிராம் வெள்ளி, 113 அயல்நாட்டு நோட்டுகள், 990 அயல் நாட்டு நாணயங்களும் காணிக்கையாக பெறப்பட்டன என கோயில் இணை ஆணையர் கல்யாணி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision