ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் - முகூர்த்தக்கால் நடும் விழா

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் -  முகூர்த்தக்கால் நடும் விழா

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை திருவிழா வரும் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழாவிற்கான முகூர்த்தக்கால் நடும் விழா இன்று நடைபெற்றது. இந்த சித்திரை திருநாளில் மூன்றாம் நாள், ஏப்ரல் 30, சிம்ம வாகனத்தில் புறப்பாடு, 4-ம் திருநாள், மே 1ம் தேதி கருட சேவை, 5ம் திருநாள் அனுமந்த வாகன புறப்பாடு, 6ம் நாள் யானை வாகன புறப்பாடு, 7ம் நாள் நெல் அளவை கண்டருளால், 8ம் திருநாள் வையாளி கண்டருளல் நடைபெறுகிறது.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் 9-ம் திருநாளான மே 6ஆம் தேதி காலை 06:00 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்ந்து மே 8-ம் தேதி சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. இந்த சித்திரை திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரியப்பன் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா மே 6ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision