அரசு மது பாட்டில்களை அனுமதியின்றி காரில் எடுத்து சென்ற இருவர் கைது

அரசு மது பாட்டில்களை அனுமதியின்றி காரில் எடுத்து சென்ற இருவர் கைது

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அய்யம்பாளையம் கருங்காடு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் ரூ.1.60 லட்சம் மதிப்புள்ள 750 அரசு மதுபாட்டில்களை விலைக்கு வாங்கி அனுமதியின்றி காரில் கடத்திய லால்குடி ஆங்கரை பகுதியைச் சேர்ந்த 25 வயதான வில்சன் பிராங்கிளின், மண்ணச்சநல்லூர்

அருகே கொனலை கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான மதுபாலன் ஆகிய இருவரை மண்ணச்சநல்லூர் போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்த ரூ.1.60 லட்சம் மதிப்புள்ள 750 மதுபாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்தி வேன் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn