பூ வியாபாரி மூதாட்டி வீட்டில் திருட்டில் ஈடுபட்ட மூன்றாவது திருடன் கைது -3 சவரன் நகை மீட்பு

பூ வியாபாரி மூதாட்டி வீட்டில் திருட்டில் ஈடுபட்ட மூன்றாவது திருடன் கைது -3 சவரன் நகை மீட்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே கடந்த ஜூன் மாதம் பூ வியாபாரி மூதாட்டி வீட்டில் பதிமூன்றரை சவரன் நகை, ரூ40 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடுத்த வழக்கில் 3-வது குற்றவாளியை கைது செய்த போலீஸார், அவனிடமிருந்து 3 சவரன் நகையினை மீட்டுள்ளனர்.

மணப்பாறை அடுத்த வையம்பட்டி காவல்நிலையம் அருகே பூ வியாபாரம் செய்து வருபவர் மூதாட்டி ச.பிலோமினாள் மேரி(65). அவரது அண்ணாநகர் வீட்டிலிருந்து கடந்த ஜூன் 7-ஆம் தேதி பதிமூன்றரை சவரன் நகை, ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை அருகே குடியிருந்த 3 நபர்கள் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே சென்று திருடி சென்றனர்.

இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த காவல் உதவி ஆய்வாளர் வினோத்குமார் தலைமையிலான போலீஸார், அதே மாதம் 20-ஆம் தேதி கேரளா மாநிலத்தில் பதுங்கியிருந்த கொள்ளையர்களான திருவனந்தபுரம் மாவட்டம் நல்லிகால சுலையூர் சிந்தாபவன் பகுதியினை சேர்ந்த ராஜன் மகன் ராஜ்குமார்(எ)உண்ணி(22), தூங்காம்பாறை கன்டலா பகுதியினை சேர்ந்த விபின்குமார் மகன் ஆடர்ஸ்(எ)அச்சு(27) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 5 சவரன் நகைகளை மீட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கேரளா கொல்லோடு அடுத்த விசித்திர பவன் பகுதியினை சேர்ந்த விஜயன் மகன் விஜிந்திரன் (33)யை ஞாயிற்றுக்கிழமை கைது செய்த வையம்பட்டி போலீஸார் அவனிடமிருந்து 3 சவரன் நகையினை பறிமுதல் செய்துள்ளனர். விஜிந்திரன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையிலடைக்கப்பட்டான்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO